வேர்ல்டு கப்பை எங்க ஊருல நடத்துங்க: அப்டேட் குமாரு

Published On:

| By Balaji

குழாயைத் திறந்தா தண்ணி வரமாட்டுக்கேங்குற கடுப்புல டிவியைப் போட்டு கிரிக்கெட் மேட்ச்சாவது பார்ப்போம்னா அங்க மழை பெய்யுதுன்னு மேட்ச்சை கேன்சல் பண்ணிட்டு கடுப்பேத்துறாங்க. அந்த கடுப்புலேயே நாலு மீம்ஸுக்கு கண்டண்ட் கொடுத்துட்டு வந்துருக்கேன்.

அதிமுகவுக்கு தலைமையேற்க வாரீர்ன்னு நீங்க யாருக்கு போஸ்டர் ஒட்டுனீங்கன்னு நம்ம ஏரியா அண்ணண்ட்ட கேட்டேன். அதுக்கு அவர் நான் போஸ்டர் அடிச்சேன். ஆனா ஒட்டலன்னு சொன்னார். என்னன்னே இவ்ளோ செலவழிச்சு போஸ்டர் அடிச்சுட்டு ஒட்டாம இருக்கீங்களேன்னு அவர் கையில வச்சிருந்த போஸ்டரை விடாப்பிடியா புடுங்கி பிரிச்சி பார்த்தேன். அவரு அம்மா ஆன்மாவே வாரீர்ன்னு அழைச்சிருக்காரு. என்னன்னு கேட்டா அப்ப தான் தம்பி இதுக்கு ஒரு முடிவு கிடைக்கும்னு சொல்லிட்டு போறாரு. அப்டேட்டை பாருங்க.. ராமதாஸ் ட்விட்டர் பாஸ்வேர்டை மறந்துட்டதா நம்மாளு ஒருத்தர் சொல்றாரு, கண்டுபிடிச்சு கொடுத்துட்டு வாரேன்.

**@Kozhiyaar**

உந்தினால் முன் செல்லலாம் என்று தவழும் பொழுது இருந்த தன்னம்பிக்கையை, ஏனோ நாம் வாழ்வில் ஓட ஆரம்பித்தவுடன் இழந்து விடுகிறோம்!!!

**@mohanramko**

நடிகர் ராதாரவி மீண்டும் அதிமுகவில் இணைந்தார் – செய்தி

திமுக ல இருந்து அதிமுக விற்கு மாறி, அதிமுக ல இருந்து திமுக விற்கு மாறி, மறுபடி திமுக ல இருந்து அதிமுக வில் இணைந்தார்…

**@ajmalnks**

ஈழத்துக்காக நான் குரல் கொடுப்பதைத் தடுக்க அமெரிக்க அரசு என்னை கைது பண்ணி அங்கேயே என்னை முடக்க பார்த்தது – சீமான்

அப்புறம் என்ன ஆச்சுண்ணே?

ஒரே ஒரு கதைதான்டா தம்பி சொன்னேன்.

என்னை மாலை மரியாதையோட போயிட்டு வா ராசான்னு வழியனுப்பி வச்சுட்டானுக-சீமான்.

**@HAJAMYDEENNKS**

எடப்பாடியையும் கலாய்க்க முடியாது மோடியையும் கலாய்க்க முடியாது என்ற கவலையில்தான் ராமதாஸ் ட்விட்டர் பாஸ்வேர்டையே மறந்துட்டாராம் !

**@mohanramko**

ஷாப்பிங் போகாம இருப்பது கூட நன்னடத்தை தானாம்…

வீட்டம்மா கிட்ட சொல்லி வைக்கணும்…

**@Akku_Twitz**

என் மகன் கோபப்பட்டதை அரசியலாக்குவது கீழ்த்தரமானது. – தமிழிசை #

கோபப்பட்ட வேற எதாவது பேசியிருக்கலாமே… அவரு ஏன் பாஜக ஒழிகனு கத்தனும்

**@ItsJokker**

பஸ்ல நேரம் போகலயே டிக் டாக் பார்க்கலாம்னு பார்த்துட்டு இருந்தேன், பக்கத்தில இருந்த மனுஷன் டக்குனு என் மொபைல உத்து பார்த்திட்டு நா ஏதோ பிட்டு படம் பார்க்குறேன் ரேஞ்சுக்கு முறைச்சிட்டு திருப்பிக்கிறான்..!!!

**@gips_twitz**

ராஜராஜசோழன் பண்ணது தப்பாவே இருந்தாலும் அதை இப்ப பேச கூடாதாம்

பெரியார் காந்தி நேருவ விமர்சிக்கும் போது இனிச்சிதுல இப்ப சாவுங்க

**@mohanramko**

குழந்தைகளை படிக்க வைப்போம் is a word

போய் புள்ளகுட்டிகளை படிக்க வைங்கய்யா is emotion

**@Thaadikkaran**

அதிமுகல ஆளாளுக்கு தலைமையேற்க வாரீர்னு தனக்கு பிடிச்ச தலைவர்களுக்கு போஸ்டர் அடிச்சுட்டு இருக்காங்க, இதெல்லாம் பார்த்துட்டு ஓபிஎஸ் கடுப்பாகி தலைமையேற்க வாரீர்னு மோடி போட்டோ போட்டு ஒரு போஸ்டர் அடிக்க போறார் பாருங்க..!

**@pencil_tweets**

திமுக, அதிமுக வை நம்பி ஏமாந்து போனோம் – பா.ரஞ்சித்

இதுக்கு பருத்தி மூட்டை குடோன்லேயே இருந்திருக்கலாம்

**@Annaiinpillai**

தொலைநோக்குடன் 5 ஆண்டு கால திட்ட அறிக்கை தயாரிக்க வேண்டும் -மோடி

#பைனாகுளர்ல பார்த்து தயாரிப்பிங்களா ஜி!

**@Annaiinpillai**

ஸ்பெலெண்டர் பைக்கை பார்த்தால் காதலுக்கு மரியாதையும் பல்சர் பைக்கை பார்த்தால் பொல்லாதவனும் நினைவுக்கு வராத பைக் பிரியர்களை பார்ப்பது அரிது!

**@parveenyunus**

ஒற்றை தலைமை என்றால், அது சசிகலா அம்மா தான்-கருணாஸ் # ஒற்றை எம்எல்ஏ நீங்க சொன்னா சரியா தான் இருக்கும்.

**@nandhu_twitts**

வழுக்கை தலையோடு மொட்டை அடிப்பவர்களுக்கு, வேண்டுதல் நிறைவேற்றியதில் திருப்தி இருப்பதில்லை..!!

**@Kozhiyaar**

எதையாவது சாதித்து விட்டதாக நினைத்து தலைக்கனம் வருவதாக தோன்றினால் உங்கள் நண்பனை அழைத்து நீங்கள் சாதித்ததை பகிர்ந்து கொள்ளுங்கள்!!!

அவன் கலாய்க்கிற கலாய்ப்பில் நீங்கள் செய்தது ஒன்றுமே இல்லை என்று விளங்கி விடும்!!

**@SKtwtz**

அடேய்களா worldcup மேட்ச் எல்லாம் தமிழ்நாட்டுல வைங்கடா அப்படியாவது மழை வருதான்னு பாக்கலாம்… வெயிலு மண்டைய பொளக்குது…

**@Annaiinpillai**

அதிமுக ஒரு வீடு போன்றது ~ திண்டுக்கல் சீனிவாசன் # அடுத்தென்ன அதன் செங்கல கூட ஒருத்தரும் தொட முடியாது அதானே!

**@RahimGazzali**

திமுகவில் எனக்கு திருப்தியில்லை. அதனால்தான் அதிமுகவில் இணைந்தேன்!- ராதாரவி.

வாங்க பொதுச்செயலாளர் பதவி தர்றோம்ன்னு அதிமுகவில் கூப்பிட்டிருப்பாங்களோ?!

-லாக் ஆஃப்

**

மேலும் படிக்க

**

**[பாஜக அழைப்பு: அலைபாயும் ஜி.கே.வாசன்](https://minnambalam.com/k/2019/06/12/20)**

**[சட்டமன்றக் கூட்டம்: எடப்பாடியின் அதிரடித் திட்டம்!](https://minnambalam.com/k/2019/06/12/25)**

**[டிஜிட்டல் திண்ணை: ஆலோசனைக் கூட்டம்! எடப்பாடி-பன்னீர் க்ளைமேக்ஸ் ஒப்பந்தம்!](https://minnambalam.com/k/2019/06/11/65)**

**[ஒற்றைத் தலைமை பற்றி பேசவில்லை!](https://minnambalam.com/k/2019/06/12/46)**

**[வாரிசுகள் தோல்வியடைந்த வரலாறு](https://minnambalam.com/k/2019/06/12/22)**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share