வேண்டுகோளுக்கு தயங்கும் `குரங்கு பொம்மை’ இயக்குநர்!

public

விதார்த், பாரதிராஜா நடிப்பில் கடந்த வெள்ளியன்று (செப்டம்பர் 1) வெளியான `குரங்கு பொம்மை திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. திரையுலகினர் பலரும் இப்படம் பார்த்து விட்டு நல்ல முறையில் விமர்சனங்களை சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இப்படத்தின் இயக்குநர் நித்திலன், திருட்டு விசிடி மூலமாகவோ உரிமம் பெறாது அப்லோடு செய்த இணையதளங்களில் டவுன்லோடு செய்தோ பார்க்க வேண்டாம் தியேட்டரில் சென்று பாருங்கள் என வேண்டுகோள் விடுத்துள்ளார் .

இதுகுறித்து நேற்று(செப்டம்பர் 3) தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ள நித்திலன், **இந்த நேரத்தில் எங்கள் படத்தை விளம்பரம் செய்வது தர்மசங்கடமாக இருக்கிறது. இருந்தும் எங்களது எல்லோரது வாழ்க்கையும் இந்த குரங்கு பொம்மை படத்தில் அடங்கி இருப்பதால் இதை எழுதுகிறேன். குரங்கு பொம்மை படத்தில் வாழ்வியல் சார்ந்த நுணுக்கங்கள், கதாபாத்திர நுணுக்கங்கள், சூழ்நிலை நுணுக்கங்கள் இதுபோல் பல நுணுக்கங்கள் ஓரிரு வினாடிகள் வந்து போகும். இதையெல்லாம் மக்களுக்கு சேர்க்க வேண்டும் என்பதற்காக உழைத்தோம். இந்த நுணுக்கங்கள் சொற்ப வினாடிகளே வந்துபோவதால் நீங்கள் திருட்டு VCD அல்லது DOWNLOAD செய்து பார்ப்பதால் இந்த நுணுக்கங்கள் உங்களை வந்து சேருமா என்று தெரியவில்லை இந்த காரணத்திற்காகவாவது திரையரங்கத்தில் வந்து பார்க்கவும்** என பதிவிட்டுள்ளார்.

அனிதாவின் மறைவுக்கு தமிழகம் முழுவதும் திரையுலகினர் உள்ளிட்ட பலரும் போராட்டம், இரங்கல் கூட்டமென நடத்தி வருகின்றனர். அதன் காரணமாகத்தான் இப்படி ஒரு வேண்டுகோளை பதிவிட்டுள்ளார் நித்திலன்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *