வேட்டியை காயப்போட்ட குழந்தைகள்: அப்டேட் குமாரு

Published On:

| By Balaji

எப்படா குழந்தைகள் தினம் வரும் பழைய போட்டோவை போட்டு லைக் வாங்கலாம்னு பல பேர் இங்க காத்திருக்காங்க. ஆனா சிலர் தான் குழந்தையாவே மாறிடுறாங்க. வேற யாரு நம்ம குழந்தை மனம் கொண்ட அமைச்சர் பெருமக்கள் தான். பலூன்களை வச்சுகிட்டு அவங்க சிரிச்ச சிரிப்ப பார்க்கனுமே.. அடடடா.. மோடியின் குழந்தைகள்ன்னு மீம் போட்டுகிட்டு இருக்காங்க. நம்ம தான் அவங்களை குழந்தைகள்ன்னு சொல்றோமே இந்த நெட்டிசன்ஸ் சும்மா இருக்காங்களா..? சிலை திறப்பு விழா அதுவுமா வேட்டியை துவைச்சு அது மேல காயப்போட்டது யாருன்னு கேட்டுகிட்டு இருக்காங்க. கரை வேட்டியா இல்லாததால அவங்களோடது இல்ல எங்க இருந்தாவது பறந்து வந்துருக்கும்னு வேற கருத்து சொல்லிகிட்டு இருக்காங்க. அப்டேட்டை பாருங்க. வேட்டி பஞ்சாயத்து முடிஞ்சிருச்சான்னு பார்த்துட்டு வாரேன்.

**@MJ_twets**

இந்த கொசுவுக்கு வயிறு முட்ட எவ்வளவு ரத்தம் தேவைன்னு தெரிஞ்சா முன்னாடியே ஒரு டம்ளர் எடுத்து வச்சிடலாம், மூதேவி நைட்டு புல்லா கடிக்குது.!

**@Kozhiyaar**

ஒரு மருத்துவருக்கு சிறந்த விளம்பர தூதர், அவரிடம் குணமடைந்த நோயாளிகளே!!

**@selvachidambara**

போகோ சேனல் மட்டுமே பார்த்துகொண்டிருந்த சுட்டிகளை செய்தி சேனல்களையும் பார்க்க வைத்திருக்கிறது கஜா ….!!

**@Thaadikkaran**

டாக்டர் பட்டம் வாங்காமலே மருத்துவ குறிப்பு அள்ளி வழங்குபவர்களை வாட்சப்பில் அதிகம் காணலாம்..!

**@Annaiinpillai**

தமிழக கூட்டுறவுத்துறை நாட்டிற்கே முன்னோடி – செல்லூர் ராஜூ# தெர்மோகோல் விட்டதுலையும் நீங்க தான் ஜி முன்னோடி!

**@rahimgazali**

சலூன்ல முடி வெட்டிக்க போகும்போது போர்த்தற துணியை முதல்ல, பச்சக்கலர்லேருந்து வேற கலர்க்கு மாத்தசொல்லனும். பச்சைக்கலர்ல போர்த்தி ஆடாம அசையாம உட்கார்ந்து எதிரே இருக்கும் கத்தி, கத்தரில்லாம் பார்த்தா ஏதோ ஆப்ரேசன் தியேட்டர்ல உட்கார்ந்திருக்க ஃபீலிங் வந்து தொலைக்குது

**@manipmp**

ஆப்-வொயிட் பேன்ட்டில் அழுக்குப்படாமல் பார்த்துக்கொள்வது

ஆயக்கலையில் அறுபத்தைந்தாவது!

**@Sakthivel_twitt**

பறவை கூண்டு வாங்கி அடைக்காதீங்க,அதுங்க நல்லாவே கூடு கட்டும். அந்த காசுல ஒரு மரம் நடுங்க அதுகளுக்கும் சேர்த்து பயன்படும்

**@nandhu_twitts**

நல்லா இருக்கும் ”ஆப்”களையும், “அப்டேட்” விட்டு கெடுப்பதுதான் புதிய டிசைன்..!!

**@Thaadikkaran**

படத்துல அவங்க அரசியலே கிழிப்பாய்ங்க, பதிலுக்கு அவங்க பட பேனரை கிழிப்பாய்ங்க. அம்புட்டுதே அரசியல்..!

**@HAJAMYDEENNKS**

முன்னாடிலாம் செல்லூர் ராஜூ பேட்டியை எதிர்பார்த்தோம்

இப்ப ரஜினி பேட்டியை எதிர்பார்க்கிறோம் !

**@ajmalnks**

பள்ளி,கல்லூரிகள் எல்லாம் விடுமுறை விட்டு மழையை எதிர்பார்த்து காத்திருந்தால் காலையில் இருந்து வெயில் சுள்ளுன்னு அடிக்குது…இப்ப என்னடான்னா பனி பல்லைக் காட்டுது.

கஜா புரியாத புதிராகவே இருக்கு.

**@ajmalnks**

திரைப்படங்கள் மூலம் எம்ஜிஆர் நல்ல கருத்துக்களை பரப்பினார், ஆனால் இப்போது டாடி, மம்மி வீட்டில் இல்லை என பாடுகிறார்கள் – அமைச்சர் ஜெயக்குமார்

ஒரு சில பேர் மெயின்ரோட்டுக்கே வரச்சொல்றாங்க அமைச்சரே

**@kathir_twits**

அம்மா உணவகத்தில் சாப்பிட்ட எடப்பாடி,ஓ.பி.எஸ்-செய்தி

உணவகம் பின்புறமுள்ள சிசிடிவிய பார்த்தா தெரிஞ்சிடும் எந்த ஹோட்டல்னு !!

**@Thaadikkaran**

கார் வண்டி என இருந்தும் என்றுமே தன்னை பணக்காரராய் காட்டி கொண்டதில்லை, கல்யாண மண்டபத்திற்கு வெளியே பொம்மை விற்பவர்

**@manipmp**

அடிக்கடி புயல் மழை வருவது மாணவர்களின் பிரார்த்தனையாகக் கூட இருக்கலாம்

**@rahimgazali**

மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மாவின் சிலையை நாங்களே துண்டு போட்டு மூடி அசிங்கப்படுத்துவோமா?

பக்கத்து அபார்ட்மெண்டில் யாரோ காயப்போட்டிருந்த துண்டு ஒன்று காற்றில் பறந்துவந்து அம்மா சிலையில் முகத்தை மூடிவிட்டது. அதை எடுப்பதுக்குள் போட்டோ எடுத்துட்டாங்க. இதுதான் நடந்தது.

**@parveenyunus**

அரசை விமர்சித்து யார் வேண்டுமானாலும் திரைப்படம் எடுக்கலாம் – அமைச்சர் சி.வி.சண்முகம் #

ஆனா..பேனரை மட்டும் நீங்க தான் கிழிப்பீங்க..அப்படிதானே..?

**@sultan_Twitz**

நடிகர் ரஜினிகாந்த் வேற்று கிரகத்தில் இருந்து வந்தாரா? – அமைச்சர் ஜெயக்குமார் #

அது இருக்கட்டும் நீங்க மெயின் ரோட்டுக்கு போனிங்களா இல்லையா?!

**@parveenyunus**

பாஜக ஆட்சிக்கு வந்த பின் அதிக அளவில் போலி செய்திகள் பரவி வருகின்றன – பிரகாஷ்ராஜ் #

மீம்ஸும் தான்.

-லாக் ஆஃப்

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share