வெள்ளைதாடியும் கைத்தடியும் அவசரத்தேவை! : அப்டேட்குமாரு

public

இந்தியா முழுக்க பாஜக காரங்க மோடி பிறந்தநாளை கொண்டாடிக்கிட்டு இருக்காங்க. ஆனால் எங்கயும் இல்லாம தமிழ்நாட்டுல மட்டும் தான் இவ்வளவு மீம்ஸ் அவரை கலாய்ச்சு வந்துருக்கு. அவருக்கு வந்த மொத்த வாழ்த்துக்களையும் கூட்டினால் கூட இங்க இருக்குற மீம்ஸ் எண்ணிக்கைக்கு கிட்ட கூட வரமுடியாது. ‘மத்த நாள்ல தான் அவரை பாடாய் படுத்துறீங்க. ஏன்ப்பா இன்னைக்கு தான் அவரோட பிறந்த நாள்னு சொல்றாரே கொஞ்சம் லீவு விடக்கூடாதா’ன்னு நம்ம நெட்டிசன்கள்ட்ட கேட்டேன். அதுக்கு அவங்க சொல்றாங்க, ‘பெரியார் பிறந்த நாள்ல மோடியை கலாய்க்காம விட்டா அது பெரியாருக்கு செய்யுற துரோகம்’னு சொல்றாங்க. ஆனால் இதுல பாதி பேர் பெரியார் போய் 20 வருசம் கழிச்சு பிறந்தவங்க தான். ஆனால் பெரியார் பேரை சொல்லி ஆட்சில இருக்குற கட்சி, சேப்பாக்கம் கிரிக்கெட் கிரவுண்டுக்கு கருப்பு சட்டை போனால் அனுமதி கிடையாதுன்னு தடை போட்டுகிட்டு இருக்கு. ஓ.பி.எஸும், ஈ.பி.எஸும் மோடிக்கு HBD-னு டிவிட் அனுப்பிகிட்டு இருக்காங்க. அவங்களுக்கு பெரியார் பிறந்தநாளை ஞாபகப்படுத்தட்டுமான்னு நெட்டிசன்கள்ட்ட கேட்டேன். அதுக்கு, ‘முதல்ல பெரியார்னா யாருன்னு சொல்லிக்கொடுங்க’ன்னு சிரிக்காம சொல்றாங்கப்பா. அப்டேட்டை பாருங்க.

**manipmp**

பேலியோ டயட்காரங்க

புரட்டாசி கடைபிடிப்பதில்லை

**HAJAMYDEENNKS**

புரோட்டாவுக்கு இலவச இணைப்பாக குருமா கிடைப்பது போல சப்பாத்தி , நான்ரொட்டி போன்றவைகளுக்கு கிடைப்பதில்லை.. பரந்த மனசுக்காரன் தமிழன்..!

**நாட்டுப்புறத்தான்**

பகுத்தறிவு பகலவன் தந்தைப் பெரியாரின் 139-ஆவது பிறந்தநாளின் அவரது போதனைகளை பின்பற்ற உறுதியேற்போம்! – ராமதாஸ்

பெரியாரோட போதனைகளை பின்பற்ற உறுதியேற்பதில் மகிழ்ச்சி, அவரது போதனைகளில் முக்கியமானது சாதிய ஒழிப்பு, ஐயா!

**Thaadikkaran**

முன்னெல்லாம் பண்டிகை காலத்துல தட்லே ஸ்வீட் வச்சு கொடுத்தா திரும்ப கொடுக்கும்போது ஸ்வீட் வச்சு வரும் இப்பெல்லாம் கொடுத்த தட்டே வர்றதில்லே..!!

**HAJAMYDEENNKS**

ரயிலில் இனி இரவு 10 மணியிலிருந்து காலை 6 மணிவரை 8 மணி நேரம் மட்டுமே தூங்க அனுமதி #

அதுக்கு பிறகு கரப்பான்பூச்சியை வெளியே விட்டுடுவாங்க போல

**Vinithan**

துணிக்கடை கண்ணாடியில் மட்டும் நாம் எந்த ஆடை போட்டு பார்த்தாலும் அழகாக தெரிகிறோம்.

**senthilcp**

ஸ்பைடர் மூலம் மகேஷ்பாபு முதல்முறையா தமிழ்ல கால் பதிக்கறாரு

ஓஹோ,அப்போ ஆபத்து ஈரோடு மகேஷ்க்கா?இளைய தளபதி விஜய்க்கா?

**BakkarSiddiq**

ரயிலில் இரவு 10 to 6 மணிவரை மட்டுமே தூங்க அனுமதி!

பயணிகள் தூங்குறதுனால தான் விபத்து ஏற்படுதுனு அக்கா விளக்கம் கொடுக்கும்கிறத நினைச்சா தான்

**IamHarunKanth**

பெரியார் பிறந்த அதே நாளில் மோடியும் பிறந்திருக்கிறார்..இதைக் கேள்விப்பட்டே,

எம்.ஆர்.ராதா அதே நாளில் மாண்டு போயிருக்கார்.

#HBDPeriyar

**Kannan**

2989 கோடி செலவில் 597 அடி உயரத்தில் உருவாகும் சர்தார் சிலையை பார்வையிட்டார் மோடி.

இறந்தகாலத்தை விட நிகழ்காலம், எதிர்காலம் முக்கியம் சாரே!

**CreativeTwitz **

பெட்ரோல் வாங்குபவர்கள் ஒன்றும் பட்டினி கிடப்பவர்கள் அல்ல – மத்தியமைச்சர்

அதை பெட்ரோல் அல்லோவன்ஸ் வாங்குற நீங்க சொல்ல கூடாது

**Arul_Twitz**

மன்னிப்பு கேட்பவருக்கு எல்லாம் மன்னிப்பு கிடைப்பது இல்லை. பழிவாங்கும் காலம் வேணா தள்ளிப்போட படுகிறது….

**HAJAMYDEENNKS**

மேடை பேச்சுக்கும் தலைமை பண்புக்கும் சம்பந்தம் கிடையாது – பெரியார் #

இதை மக்கள் உணராததால்தான் மோடி இன்று பிரதமர் !

#HBDPeriyar

**மெத்த வீட்டான்**

தமிழ் ராக்கர்ஸ், தமிழ்கன் அட்மின் புகைப்படங்களை வெளியிட்டார் விஷால் – செய்தி #

போட்டோவை வைத்து ரசிகர் மன்றம் ஆரம்பிக்க போறாங்க மக்கள்..!

**HAJAMYDEENNKS**

அடிச்சு ஆட வேண்டிய ஃப்ரி ஹிட் பாலை வேஸ்ட் பண்ணியது போல எதிர்க்கட்சிகள் அருமையான வாய்ப்பை தவற

விட்டுக்கொண்டிருக்கின்றன…!

**vinothanaseeli**

1987ல் ஒரு வாரக்கால சாலைமறியலால் உலகையே திரும்பசெய்தார் ராமதாஸ்

அப்போது தான் தமிழ்நாடு லெமூரியா கண்டத்தில் இருந்து பிரிந்தது யுவர்ஆனர்

**imparattai**

ஏண்ணே நம்ம போட்டோ எவ்வளவு கேவலமா எடுத்து இதுல போட்டுட்டு இதுக்கு பேர்மட்டும் ஏண்ணே ஸ்மார்ட் கார்டுன்னு வச்சிறுக்கானுக?

**thoatta**

கட்சி ஆரம்பித்து ரஜினியோடு சேர்ந்து அரசியல் செய்வதற்கு, கடைசி வரை வெறும் ட்விட் மட்டுமே எழுதலாம் என்கிறார் மர்மநபர்

**HAJAMYDEENNKS**

மணல் நமக்கு விளையாடும் இடமாக இருந்தது..நம் குழந்தைகளுக்கு அது ஒரு காட்சிப்பொருளாக இருக்க போகிறது…!

**udanpirappe**

தாத்தா பேர்ல இருந்த சாதி,

அப்பா பேர்ல இல்லை .

ஒவ்வொரு வீட்டுலயும் பெரியார் கதகளி ஆடிட்டு போய்ருக்கார்.

பெரியார்டா.

-லாக் ஆஃப்

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *