அசாம் மாநிலத்தில் பெருவெள்ளம் உருவாகியுள்ள நிலையில், பல்வேறு பகுதிகளில் வெள்ளத்தின் நிலை குறித்தும், மாநில, மத்திய அமைச்சகங்களின் தயார் நிலை குறித்தும் ஆலோசிக்க மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் உயரதிகாரிகளுடன் நேற்று (ஜூலை 13) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தின்போது, தென்மேற்கு பருவ மழையால் நாடு முழுவதும் உருவாகியுள்ள பிரச்சினைகள் குறித்து நடவடிக்கை எடுக்க தயார் நிலையில் இருக்கும்படியும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கும்படியும் அதிகாரிகளுக்கு அமித் ஷா உத்தரவிட்டார்.
கடந்த மூன்று நான்கு நாட்களாக அசாம், பிகார் ஆகிய மாநிலங்களில் மிகக் கடுமையான மழை பொழிந்ததாகவும், அடுத்த 48 மணி நேரத்துக்கு இவ்விரு மாநிலங்களிலும் பெருமழையை எதிர்பார்க்கலாம் எனவும் இந்திய வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் அமித் ஷாவிடம் தெரிவித்தனர்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் தேவையான உபகரணங்களுடன் 73 தேசிய பேரிடர் மீட்புப் படைக் குழுக்கள் தயாராக இருப்பதாக தேசிய பேரிடர் மீட்புப் படையின் பொது இயக்குநர் அமித் ஷாவிடம் தெரிவித்தார். ஏற்கெனவே தயார் நிலையில் இருக்கும் மண்டல மீண்டு மைய குழுக்களுடன் கூடுதலாக தேசிய பேரிடர் மீட்புக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும், இதுவரையில் அசாம், பிகார் மாநிலங்களில் 750 பேரை மீட்புப் படையினர் மீட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அசாம் மாநிலத்தில் பிரம்மபுத்திரா, பெகி, ஜியாபரலி, கடகல், பராக் ஆகிய நதிகளிலும், பிகாரில் கம்லா, பாக்மதி, மகாநந்தா, கண்டாக் ஆகிய நதிகளிலும் நீரின் உயரம் அபாயக் குறிக்கு மேல் இருப்பதாக மத்திய நீர் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர். இவற்றை முறையே கவனித்து மத்திய நீர் ஆணையமும், இந்திய வானிலை ஆய்வு மையமும் தொடர்ந்து கண்காணிப்பு அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன.
மத்திய உள்துறை அமைச்சகம், தேசிய பேரிடர் மீட்புப் படை, இந்திய வானிலை ஆய்வு மையம், மத்திய நீர் ஆணையம் ஆகியவற்றின் கட்டுப்பாட்டு அறைகளில் 24 மணி நேரமும் நிலைமை கண்காணிக்கப்பட்டு வருகிறது. வெள்ளத்தால் பாதிப்படையக்கூடிய மாநிலங்களுடன் தொடர்பில் இருந்து வெள்ளம் குறித்து கண்காணிப்புடன் இருக்கும்படி பேரிடர் மேலாண்மை துறைக்கு அமித் ஷா உத்தரவிட்டுள்ளதாக மத்திய உள் துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் தெரிவித்துள்ளார்.
**
மேலும் படிக்க
**
**[அவசரப்பட்டுவிட்டேனோ? புலம்பிய தங்கம்](https://minnambalam.com/k/2019/07/13/18)**
**[நிர்வாகிகள் விலகுவதை தடுக்க…சசிகலா போட்ட பட்ஜெட்!](https://minnambalam.com/k/2019/07/13/7)**
**[டிஜிட்டல் திண்ணை: திமுக எம்.எல். ஏ.க்களுக்கு லைஃப் செட்டில்மென்ட்- கூல் எடப்பாடி](https://minnambalam.com/k/2019/07/13/72)**
**[அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்!](https://minnambalam.com/k/2019/07/13/17)**
**[ மோடிக்கு தயாநிதியை தூது அனுப்பினாரா ஸ்டாலின்?](https://minnambalam.com/k/2019/07/12/24)**
�,”