{வெல்க இந்தியா: ஜெர்சிக்குப் பாலினம் கிடையாது!

Published On:

| By Balaji

இந்திய கிரிக்கெட் அணியின் போட்டியை பற்றித் தகவலறிய இணையத்தில் தேடினால், ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிவரும் ஆண்கள் கிரிக்கெட் அணியைப் பற்றிய தகவல்தான் கிடைக்கும். உலகக் கோப்பை டி20 போட்டியில் அரையிறுதி ஆட்டத்தில் நாளை (23.11.18) காலை 5.30 மணிக்கு விளையாடவிருக்கும் கிரிக்கெட் அணியைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும் என்றால் ‘பெண்கள் கிரிக்கெட் அணி’ என்றுதான் தேடவேண்டியதிருக்கிறது. 0 அல்லது 1 ஆகிய எண்களை மட்டுமே அறியக்கூடிய இணையத்தையே இந்த அளவுக்கு மாற்றி வைத்திருக்கிறோம் என்றால், சாதாரண கிரிக்கெட் ரசிகர்கள் என்ன செய்வார்கள்.

இங்கிலாந்து அணியுடன் டி20 உலகக் கோப்பை அரையிறுதியில் விளையாடவிருக்கும் இந்திய அணிக்கு ஆதரவளிக்கும் விதமாக, ஆஸ்திரேலியாவில் இருக்கும் விராட் கோலியிடம் பேசி “நாட்டுக்காக விளையாட ஜெர்சியை அணிந்திருப்பவர்கள் எந்த மதம், இனம், மொழி, நிறம், பாலினம் என்று கவலைப்படவே கூடாது. அவர்கள் எவ்வளவு பாடுபடுகிறார்கள் என்று மட்டுமே பார்க்கவேண்டும். டி20 உலகக்கோப்பை அரையிறுதியில் விளையாடவிருக்கும் இந்திய அணியை நான் ஊக்கப்படுத்தி இந்த வீடியோவை வெளியிடுகிறேன். என்னைப்போலவே அனைவரும் அவர்களை ஊக்கப்படுத்தி ஆதரவளிக்க வேண்டும்” என்ற கோரிக்கையுடன் வீடியோ வெளியிட வைத்திருக்கிறது உபெர் இந்தியா நிறுவனம்.

விராட் கோலியின் இந்த முயற்சியைப் பாராட்டி அனைத்து சமூக வலைதளங்களிலும் பிரபலங்கள் முதல் கடைக்கோடி ரசிகர்கள் வரை வீடியோக்களை வெளியிட்டுவருகின்றனர்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share