சென்னையில் ஏற்பட்டுள்ள தண்ணீர்ப் பஞ்சத்தால் வீட்டில் இருந்தபடி பணியாற்ற தங்களது ஊழியர்களை ஐடி நிறுவனங்கள் அறிவுறுத்தியுள்ளன.
இரண்டு மாதங்களாக வெயில் ஒட்டுமொத்த இந்தியாவையும் வாட்டிக்கொண்டிருக்கிறது. வெயிலின் தாக்கத்தால் உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை போதிய மழை பெய்யாததால் தண்ணீர் தட்டுப்பாடு வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்துள்ளது. இதனால் குடிநீருக்குக் கூட பல கி.மீ சென்று தண்ணீர் எடுத்து வரும் நிலை உருவாகியிருக்கிறது. கிராமப் பகுதிகளில் இவ்வாறு என்றால், நகர்ப் பகுதிகளில் தண்ணீர் கேட்டு மக்கள் குடங்களுடன் சாலைகளில் போராடி வருகின்றனர். சென்னைக்குக் குடிநீர் வழங்கும் புழல், செம்பரம்பாக்கம் போன்ற ஏரிகள் மழை இல்லாமல் வறண்டு போய் உள்ளதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இந்தச் சூழலில் சென்னை, ஒ.எம்.ஆர் சாலைகளில் உள்ள ஐடி நிறுவனங்கள், தண்ணீர் பற்றாகுறை காரணமாக தங்களது ஊழியர்களை வீட்டிலிருந்தே பணியாற்ற அறிவுறுத்தியிருப்பதாக *டைம்ஸ் ஆஃப் இந்தியா* தெரிவித்துள்ளது.
அடையாறு, டைடல் பார்க், பெருங்குடி முதல் சிறுசேரி, சோழிங்கநல்லூர், சிப்காட் வரை 600க்கு மேற்பட்ட ஐடி நிறுவனங்கள் உள்ளன. இதில் 3.2 லட்ச ஊழியர்கள் பணியாற்றிவருகின்றனர். .
ஒ.எம்.ஆர் பகுதிக்கு, நாளொன்றுக்கு 3 கோடி லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. இதில் 60 சதவிகிதம் ஐடி நிறுவனங்கள் பயன்படுத்தி வருகின்றன. சிப்காட் ஐடி பார்க்கில் 46 நிறுவனங்களில் 65.000 பேர் பணியாற்றி வருகின்றனர். இங்கு நாள் ஒன்றுக்கு 20 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது.. ஆனால் இங்கு 10 லட்சம் லிட்டர் தண்ணீர் மட்டுமே தரப்பட்டு வருகிறது. இதனால் அங்கு தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது.
இந்த சூழலில் சுமார் 12 ஐடி நிறுவனங்கள் தங்கள் அலுவலகங்களில் பணிபுரியும் 5000 ஊழியர்களை, அவர்களுக்கு வசதிக்கு ஏற்றாற்போல், அடுத்த 100 நாட்களுக்கு வீட்டிலிருந்து பணியாற்றலாம் என்று தெரிவித்துள்ளன. சோழிங்கநல்லூர் எல்காட்டில் உள்ள ஃபோர்டு பிஸ்னஸ் சர்வீஸ் நிறுவனம், தங்களது ஊழியர்கள் வீட்டிலிருந்தே குடிநீரை எடுத்துவர அறிவுறுத்தியுள்ளது.
சென்னையில் ஐடி நிறுவனங்கள் மட்டுமின்றி பெரும்பாலான நிறுவனங்களிலும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுவதால் ஊழியர்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
**
மேலும் படிக்க
**
**[அதிமுக: அந்த 11 பேர் குழுவில் யார் யார்?](https://minnambalam.com/k/2019/06/13/22)**
**[ரோஜாவுக்கு முக்கிய அரசு பதவி!](https://minnambalam.com/k/2019/06/13/11)**
**[டிஜிட்டல் திண்ணை: விரைவில் பொதுச் செயலாளர் தேர்தல்- ஓ.பன்னீர் சூசகம்](https://minnambalam.com/k/2019/06/12/74)**
**[பாக்கியராஜ் அணிக்கு விஜயகாந்த் ஆதரவு!](https://minnambalam.com/k/2019/06/13/44)**
**[அதிமுகவின் கொங்கு கோட்டை உடைந்தது: ஸ்டாலின்](https://minnambalam.com/k/2019/06/13/17)**
�,”