விஸ்வரூபம் 2: நெட்டிசன்கள் குத்தத் தவறிய குறியீடுகள்!

public

விஸ்வரூபம்-2 ட்ரெய்லர் வந்தாலும் வந்துச்சு. பழைய பேஷன்ட் காலாவை டிஸ்சார்ஜ் பண்ணிட்டு புது பேஷன்ட் விஸ்வரூபத்தை அட்மிட் பண்ணுங்கடான்னு வெறித்தனமா களமாட ஆரம்பிச்சிருக்காங்க இணைய போராளிகள்.

முன்னாடியாவது சும்மா இருந்தாரு. இப்ப கட்சி வேற ஆரம்பிச்சிருக்காரா; ட்ரெய்லரைக் கூட அவரோட கட்சியோட கனெக்ட் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க நம்ம நெட்டிசன்ஸ். இவர் மட்டும் சினிமாவுல இருந்து அரசியலுக்கு கனெக்ட் கொடுக்கும்போது, நாங்க ட்ரெய்லர்ல இருந்து அரசியலுக்குக் கொடுக்கக்கூடாதா என்னன்னு கேக்குறாங்க. அதானே யார் சொன்னா தாராளமா கொடுக்கலாம். அதானே நியாயம். ஆங்க் அப்டி என்னென்ன கனெக்ட் பண்ணலைன்னு பாப்போம் வாங்க.

* ட்ரெய்லர் ஓபனிங்லேயே, ‘நாசர் ஸ்கூலுக்கு போகட்டும்’ங்கிறார் கமல். ஏன் ஆண்டவரே நாசர் ஸ்கூலுக்கு போயிட்டா அவர் எப்படி உங்க படத்துல நடிப்பாரு? எதுவும் தெரிஞ்சுதான் பேசுறீங்களான்னு கேட்டு இன்னும் ஒருத்தர்கூட மீம் போடாதாது ஆச்சரியமா இருக்கு.

* தூத்துக்குடிக்கு போன ரஜினியை யார் நீங்கனு கேட்டு அசிங்கப்படுத்துனதாலேயே அட்வான்ஸா சுதாரிச்சிக்கிட்ட கமல், ஞாபகம் வருகிறதா…? யாரென்று தெரிகிறதா?ன்னு முன்னாடியே கேட்டுக்கிட்டு எண்டர் ஆகுறாரு பாத்தீங்களா. அதான்டா என் தலைவன்னு கமலை ஆதரிச்சும் ஸ்டேட்டஸ் தட்டலாமே உறவுகளே…

* அப்புறம் கமலைத் திட்டனும்னா ரொம்பலாம் ரூம் போட்டு யோசிக்க வேண்டியது இல்ல. நேரா இந்தி ட்ரெய்லருக்கு போங்க. அது 1.48 நிமிஷம் ஓடுதா? அப்படியே தமிழ் டிரைலருக்கு வாங்க 1.45 நிமிஷம்தான் ஓடுது. அப்புறமென்ன, இந்திக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துட்டு தமிழை மட்டம் செய்யும் கமலின் நிஜ முகத்தை இனியாவது புரிந்துகொள்ளுங்கள் நட்புகளே அதிகம் ஷேர் பண்ணச்சொல்லுங்கன்னு தட்டிவிட வேண்டாமா?

* அடுத்ததா அப்படியே கமலைத் திட்டுறமாதிரி எதுனா அரசியல் கண்டெண்ட் சிக்குமானு தீவிரமா தேடுறவங்க இதை நோட் பண்ணுங்க: அதாவது, ட்ரெய்லர்ல, ‘நீர் இன்றி வேர் இல்லை’ன்னு காலங்காலமாக சொல்லப்படுற ஒரு சொல்லாடல் வருது. ஆனா அரசியலில் கமல் இன்றி யாரும் இல்லைங்கிறதைத்தான், ‘‘நீரின்றி வேறில்லை”ன்னு சொல்லிருக்காங்கன்னு சொல்லி எதையாவது கோர்த்து விடலாம்.

* அப்புறம், தடைகளே வென்றே சரித்திரம் படைத்தவன்னு ட்ரெய்லர்ல சொல்ற அந்த சீன்ல கரெக்டா ஹெலிகாப்டர் வர்றதும், ஹெலிஹாப்டர்னதும் ஆட்டோமேட்டிக்கா ஜெயலலிதா மைண்ட்ல வர்றதையெல்லாம் இந்தத் தமிழ்ச்சமூகம் எப்படி விட்டுச்சுன்னு யோசிக்கும்போது என் கண்கள் குளமாவதை தடுக்கமுடியவில்லை கோப்ப்ப்பால்.

* ராஜ் கமல் லோகோ ஒரு சாயல்ல தாமரை மாதிரிதான் இருக்கு. சும்மாவே கமல் பிஜேபி ஆதரவாளர்னு சொல்றவங்க, இதை இன்னும் மீம் டெம்பளேட்டாக கையில எடுக்காதது ஆச்சரியத்திலும் ஆச்சரியமாக இருக்கு. ஏலேய்… அது சாருஹாசன் சந்திரஹாசன், கமலஹாசன் இந்த மூணு பேரையும் குறிக்கும் விதமாகத்தான் அப்படி இருக்கு. போக, பிஜேபி கட்சி ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே ராஜ் கமல் ஃபிலிம்ஸ் ஆரம்பிச்சாச்சுன்னு யாராவது பதில் சொல்லி உங்களை புஸ்… ஆக்குனா அதுக்கு நிர்வாகம் பொறுப்பில்ல…

இன்னும் நிறைய இருக்கு. ஆனா, இப்போதைக்கு இதுபோதும்ங்கிறதால இத்தோட நிறுத்துறோம்.

-ஜெ.வி.பிரவீன்குமார்�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *