சண்டைக் கோழி 2 திரைப்படத்தை அடுத்து விஷால் நடிக்கும் ‘அயோக்யா’ படம் பூஜையுடன் இன்று (ஆகஸ்ட்23) துவங்கியது.
விஷால் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘சண்டக் கோழி 2’. லிங்குசாமி இயக்கியுள்ள இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படம் அக்டோபர் மாதம் 18ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
இந்நிலையில், விஷாலின் அடுத்த படம் இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது. லைட் ஹவுஸ் மூவி மேக்கர்ஸ் பி.மது தயாரிப்பில் உருவாக இருக்கும் இப்படத்திற்கு ‘அயோக்யா’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள். ஏ.ஆர்.முருகதாஸின் இணை இயக்குநரான வெங்கட்மோகன் இயக்கும் இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடிக்கிறார். மேலும் பார்த்திபன், கே.எஸ்.ரவிக்குமார், சச்சு, வம்சி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். சாம் சிஎஸ் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
இன்று நடைபெற்ற இப்படத்தின் பூஜையில் தயாரிப்பாளர் ஜிகே.ரெட்டி, கலைப்புலி எஸ்.தாணு, ரவி பிரசாத், கே.எஸ்.ரவிக்குமார், காட்ராகட்ட பிரசாத், கிருஷ்ணா ரெட்டி, இயக்குநர்கள் ஏ.ஆர்.முருகதாஸ், லிங்குசாமி ஆகியோர் கலந்துகொண்டனர்.
தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர், காஜல் நடிப்பில் வெளியாகி ஹிட்டான ‘டெம்பர்’ படத்தின் தமிழ் ரீமேக்கே இப்படம். கடந்த 2015ஆம் ஆண்டு வெளியானது. இந்தப் படத்தின் இந்தி ரீமேக்காக உருவாகும் ‘சிம்பா’ படத்தில் ரன்வீர் சிங், சாரா அலிகான் ஆகியோர் நடிக்கின்றனர்.
இதில் ஜூனியர் என்.டி.ஆர் நடித்த போலீஸ் வேடத்தில் நடிக்கவிருக்கிறார் விஷால். விஷால் ஏற்கெனவே, ‘சத்யம்’, ‘வெடி’, ‘பாயும் புலி’ ஆகிய படங்களில் போலீஸ் அதிகாரியாக நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
�,”