விவசாயிகள் பெயரில் வங்கிக் கடன்பெற்று மோசடி செய்த வழக்கை சிபிஐக்கு மாற்றி விசாரணை நடத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
தஞ்சாவூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் திருஆரூரான், அம்பிகா ஆகிய பெயர்களில் சர்க்கரை ஆலைகளை நடத்தி வரும் திருஆரூரான் சுகர்ஸ் நிறுவனம் பல்வேறு பொதுத்துறை வங்கிகளில் இருந்து விவசாயிகளின் பெயர்களில் கடன் வாங்கி மோசடி செய்தது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இவ்விவகாரத்தில் ஆலை குழும அதிபர் ராம் வி .தியாகராஜன் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த மோசடிக்கு கண்டனம் தெரிவித்து பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ”திருஆரூரான் சுகர்ஸ் நிறுவனம் சார்பில் நடத்தப்படும் சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய 25,000க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு ரூ.125 கோடிக்கும் கூடுதலாக நிலுவைத் தொகை வழங்க வேண்டியுள்ளது. ஆனால், இரு ஆண்டுகளுக்கும் மேலாக அந்த நிலுவைத் தொகையை வழங்காத ஆலை நிர்வாகம், நிலுவைத் தொகை வழங்க ஏற்பாடு செய்வதாகக் கூறி விவசாயிகளிடமிருந்து சில படிவங்களில் கையெழுத்து வாங்கி, அவற்றை வைத்து விவசாயிகள் பெயரில் வங்கிகளில் இருந்து பல நூறு கோடி கடன் வாங்கியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் சுமார் ரூ.90 கோடியும், தஞ்சாவூர் மாவட்டத்தில் சுமார் ரூ.360 கோடியும் கடன் வாங்கப்பட்டு மோசடி நடந்துள்ளது” என்று பட்டியலிட்டுள்ளார்.
”பொதுத்துறை வங்கி உயரதிகாரிகளின் துணை இல்லாமல் இத்தகைய மோசடியை திருஆரூரான் சுகர்ஸ் நிறுவனம் அரங்கேற்றியிருக்க முடியாது. விவசாயிகள் வேளாண் பயன்பாட்டுக்காக சில ஆயிரம் ரூபாய் கடன் கேட்டால் கூட, அதற்கு ஏராளமான ஆவணங்களைக் கேட்கும் பொதுத்துறை வங்கி நிர்வாகங்கள், எந்த ஆவணமுமே இல்லாமல் வெற்றுப் படிவத்தில் போடப்பட்டிருந்த விவசாயிகளின் கையெழுத்துகளை மட்டும் வைத்துக் கொண்டு எந்த விசாரணையும் மேற்கொள்ளாமல் ரூ.450 கோடி கடனை எப்படி வாரி வழங்கின?” என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள ராமதாஸ், உழவர்களுக்கு துரோகம் இழைத்து அவர்களின் நம்பிக்கையை இழந்து விட்ட திருஆரூரான் சுகர்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான சர்க்கரை ஆலைகள் இனியும் பழைய நிர்வாகத்தில் இயங்குவது சரியல்ல. அது மேலும் மேலும் ஊழல்களும், மோசடிகளும் நடப்பதற்கு மட்டும் தான் வழி வகுக்கும். எனவே, திருஆரூரான் சுகர்ஸ் நிறுவனத்தின் அனைத்து சர்க்கரை ஆலைகளையும் அரசுடைமைக்கி தமிழக அரசே நடத்த வேண்டும். அதுமட்டுமின்றி, விவசாயிகள் பெயரில் பெறப்பட்ட அனைத்துக் கடன்களையும் ஆலை உரிமையாளரின் பெயருக்கு மாற்றி, அவரிடமிருந்து வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கடன் வசூல் என்ற பெயரில் உழவர்கள் துன்புறுத்தப்படாமல் இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்.இந்த மோசடியில் பாரத ஸ்டேட் வங்கி, கார்ப்பரேஷன் வங்கி, பேங்க் ஆஃப் பரோடா ஆகிய வங்கிகளின் அதிகாரிகளுக்கு உள்ள தொடர்பு குறித்தும் விசாரித்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
.
.
**
மேலும் படிக்க
**
.
[ டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலின் அழுத்தம்; பொருளாளர் பதவியை இழக்கிறார் துரைமுருகன்?](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/10/77)
.
[ஆகாஷ்- திலகவதி: என்ன நடந்தது? என்ன நடக்கிறது? முழு ரிப்போர்ட்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/10/74)
.
[அமமுக சின்னத்தை அழித்தால் ரூ.1 லட்சம்: அமைச்சர்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/10/27)
.
[கோவைத் தென்றல் ஓய்ந்தது!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/10/51)
.
.
[சசிகலாவுக்குத் தூதுவிட்ட எடப்பாடி பழனிசாமி](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/09/26)
.�,”