விவசாயத்தை விதவிதமாக அழிக்கிறார் எடப்பாடி: தினகரன்

Published On:

| By Balaji

விவசாயி மகன் என்று சொல்லிக்கொள்ளும் முதல்வர் பழனிசாமி விவசாயத்தை விதவிதமாக அழிக்கிறார் என்று அமமுக பொதுச்செயலாளர் தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.

மயிலாடுதுறையில் விவசாய நிலங்களில் பொக்லைன் இயந்திரங்களைக் கொண்டு குழிதோண்டி, கெயில் நிறுவனம் [எரிவாயு குழாய்களை பதித்துள்ளது]( https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/17/60). இதற்கு தமிழகம் முழுவதும் சமூக செயற்பாட்டாளர்கள், அரசியல் கட்சியினரிடையே கடுமையான கண்டனங்கள் எழுந்து வருகிறது. இந்நிலையில் காவிரி டெல்டா பகுதிகளில் வயல்களை அழித்து எரிவாயு குழாய் பதிக்கும் பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என இன்று (மே 18) அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

மத்திய, மாநில அரசுகளின் மனசாட்சியற்ற செயலுக்கு கண்டனம் தெரிவிப்பதாகக் கூறியுள்ள அவர், “சீர்காழியை அடுத்த மாதானம் முதல் செம்பனார்கோவில் அருகில் உள்ள மேமாத்தூர் வரையிலான விளைநிலங்களில் எரிவாயு குழாய்களைப் பதிக்க கெயில் நிறுவனம் ஒற்றைக்காலில் நின்று வருகிறது. அப்பகுதி விவசாயிகள் இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதையும் மீறி அதிகாரிகளின் துணையோடு நடவு செய்யப்பட்டிருக்கிற வயல்களில் கெயில் நிறுவனம் குழாய்களை அமைத்து வருகிறது.

கோவை, திருப்பூர், சேலம், ஈரோடு, நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் கெயில் நிறுவன குழாய்களைப் பதிக்க உச்ச நீதிமன்றம் தடை விதித்த இரண்டொரு நாளில், நாகையில் இப்படி அவசர அவசரமாகக் குழாய் பதிக்க என்ன அவசியம் ஏற்பட்டிருக்கிறது? என்று கேள்வியெழுப்பியுள்ளார்.

மனசாட்சியற்ற இந்த பாதகச் செயலை பழனிசாமி அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள அவர், “நான் ஒரு விவசாயி என்று சொல்லுகிற பழனிசாமிதான் விவசாயத்தை அழிக்கிற விதவிதமான வேலைகளை தொடர்ச்சியாகச் செய்து கொண்டிருக்கிறார். விவசாயிகளின் வயிற்றில் அடிக்கிற இப்பணிகளை மத்திய, மாநில ஆட்சியாளர்கள் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். அங்கே குவிக்கப்பட்டிருக்கிற வாகனங்களையும், எந்திரங்களையும் அப்புறப்படுத்த வேண்டும். விவசாயிகள் தங்கள் பணியை மேற்கொள்ள இடையூறு ஏற்படுத்தக் கூடாது” என்று கூறியுள்ளார்.

இதுதொடர்பாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஊர் மக்கள் திரண்டு எதிர்ப்புத் தெரிவித்தும், தமிழக அரசு அதிகாரிகள் கவலையின்றி அலட்சியப்போக்குடன் செயல்படுவதால், கெயில் நிறுவனம் தமது விருப்பம் போல விளைநிலங்களைச் சீரழிக்கும் பணியைச் செய்து வருகிறது. சாகுபடி செய்யப்பட்ட பயிர்கள் கண்முன்னே அழிவதைப் பார்த்து விவசாயிகள் கதறி அழுது கண்ணீர் வடிக்கும் காட்சி நெஞ்சை உலுக்குகிறது.

கெயில் நிறுவனத்தின் இம்முயற்சி கடுமையான கண்டனத்துக்குரியது. காவிரி பாசனப் பகுதிகளில் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் எரிவாயு எடுத்தல் உள்ளிட்ட நாசகர திட்டங்களை ரத்து செய்யக் கோரி மக்கள் போராட்டம் தீவிரமடையும் சூழலை உணர்ந்துகொண்டு, தமிழக அரசு இத்திட்டங்களுக்கு உடனடியாகத் தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” என்று கூறியுள்ளார்.

.

.

**

மேலும் படிக்க

**

.

**

[விமர்சனம்: மிஸ்டர் லோக்கல்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/18/7)

**

.

**

[டிஜிட்டல் திண்ணை: கெஞ்சல், மிரட்டல்- கமல் வெளியிடாத ரகசியத் தகவல்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/17/84)

**

.

**

[ஸ்பெயின் ரசிகர்களைக் கவர்ந்த தனுஷ்](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/17/53)

**

.

**

[தினகரனுக்கு எடப்பாடி சொன்ன செய்தி!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/17/27)

**

.

**

[மோடி காய்ச்சல்: சந்திரபாபு நாயுடு பரபரப்பு!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/18/52)

**

.

.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share