}விற்பனையில் அமேசான், லாபத்தில் ஃபிளிப்கார்ட்!

public

பிரபல ஆன்லைன் விற்பனை நிறுவனங்களான அமேசானும், ஃபிளிப்கார்ட்டும் விற்பனையிலும், வருவாயிலும் ஒன்றை ஒன்று விஞ்சியுள்ளன.

இந்தியாவில், ஆன்லைன் மின்னணு வர்த்தக நிறுவனங்கள் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது அமேசான் மற்றும் ஃபிளிப்கார்ட் ஆகியவைதான். சந்தையில் தங்களது ஆதிக்கத்தை நிலைநிறுத்திக்கொள்ள இரண்டு நிறுவனங்களும் ஒன்றோடு ஒன்று மிகக் கடுமையாகப் போட்டிபோட்டு வருகின்றன. கிட்டத்தட்ட இரண்டு நிறுவனங்களுக்கும் இடையில் ஒரு வர்த்தகப் போர் நடக்கிறது என்றுகூடச் சொல்லலாம். அந்த அளவுக்கு அதிரடி ஆஃபர்களையும், மெகா விற்பனைகளையும், பண்டிகைக் காலச் சலுகைகளையும் இரு நிறுவனங்களும் அளித்து விற்பனையில் ஈடுபட்டு வருகின்றன.

இதில் அமேசான் நிறுவனம் உலகின் முதன்மையான ஆன்லைன் விற்பனை நிறுவனமாகவும், ஃபிளிப்கார்ட் நிறுவனம் இந்தியாவில் முதன்மையான ஆன்லைன் விற்பனை நிறுவனமாகவும் திகழ்கின்றன. இந்தியாவில் இந்த நிறுவனங்களின் விற்பனை மற்றும் வருவாய் குறித்த விவரங்களை *பிரிட்டிஷ் இன்வெஸ்ட்மெண்ட் பார்க்லேஸ்* என்ற நிறுவனம் ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில், ‘இந்த ஆண்டு மார்ச் மாதத்தோடு முடிவடைந்த 2017-18 நிதியாண்டில் ஃபிளிப்கார்ட் நிறுவனம் 3.8 பில்லியன் டாலர் வருவாயை ஈட்டியுள்ளது. ஆனால் அமேசான் நிறுவனம் 3.2 பில்லியன் டாலர் வருவாயை மட்டுமே ஈட்டியுள்ளது. இது ஃபிளிப்கார்ட்டின் வருவாயைக் காட்டிலும் 19 விழுக்காடு குறைவாகும்.

இருப்பினும் பொருட்கள் விற்பனையில் அமேசான் நிறுவனம் ஃபிளிப்கார்ட்டை விஞ்சியுள்ளது. 2017-18ஆம் நிதியாண்டில் அமேசான் நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனை மதிப்பு (ஜி.எம்.வி.) 7.5 பில்லியன் டாலர்களாக உள்ளது. இது ஃபிளிப்கார்ட் விற்பனையைக் காட்டிலும் 20 விழுக்காடு அதிகமாகும். ஃபிளிப்கார்ட் நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனை மதிப்போ 6.2 பில்லியன் டாலர்களாக மட்டுமே உள்ளது. அமேசான் நிறுவனத்தின் வருவாய் ஒரே ஆண்டில் 73 விழுக்காடும், ஃபிளிப்கார்ட் நிறுவனத்தின் வருவாய் 40 விழுக்காடும் உயர்வைக் கண்டுள்ளன’ என்று கூறப்பட்டுள்ளது.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *