விம்பிள்டன்: பெடரரை வீழ்த்துவாரா நடப்பு சாம்பியன்?

Published On:

| By Balaji

உலகமே உற்றுப்பார்க்கும் இரு முக்கிய விளையாட்டுத் தொடர்களின் இறுதிப் போட்டிகள் இன்று (ஜூலை 14) லண்டனில் நடைபெறுகின்றன.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. அதே போல் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் தொடரின் இறுதிப் போட்டிகளும் நடைபெறுகிறன.

பெண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் ருமேனியாவைச் சார்ந்த சிமோனா ஹாலெப் அமெரிக்க முன்னணி விராங்கனையான செரீனா வில்லியம்ஸை வீழ்த்தி பட்டத்தை வென்றார்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டி இன்று இந்திய நேரப்படி 6.30 மணிக்கு தொடங்குகிறது. இதில் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த ரோஜர் பெடரரும் செர்பிய வீரர் ஜோகோவிச்சும் மோதுகின்றனர்.

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளின் நாயகனாக வலம் வரும் பெடரர் இதுவரை 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். விம்பிள்டன், யு.எஸ் ஓபன், பிரெஞ்சு ஓபன் மற்றும் ஆஸ்திரேலிய ஓபன் ஆகிய நான்கு போட்டிகளே கிராண்ட்ஸ்லாம் போட்டிகள் என்றழைக்கப்படுகின்றன. இதில் விம்பிள்டன் முக்கியமான போட்டியாக கருதப்படுகிறது.

பெடரர் இதுவரை 8 விம்பிள்டன் பட்டங்களைக் கைப்பற்றியுள்ளார். இதனால் 21ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை கைப்பற்றவேண்டும் என்ற முனைப்பில் அவர் களமிறங்குகிறார்.

அவரை எதிர்த்து ஆடும் செர்பிய வீரர் ஜோகோவிச் உலகின் முன்னணி வீரராக வலம் வருகிறார். கடந்த ஆண்டில் இதே விம்பிள்டனில் பெடரரை வீழ்த்தி பட்டம் வென்றுள்ளார். 15 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களையும், 4 விம்பிள்டன் பட்டங்களையும் இவர் வென்றுள்ளார். இதனால் இறுதிப்போட்டியில் சுவாரஸ்யத்திற்கு குறை இருக்காது.

**

மேலும் படிக்க

**

**[ வேலுமணியா இப்படி? – எடப்பாடி ஆதங்கம்!](https://minnambalam.com/k/2019/07/14/27)**

**[அவசரப்பட்டுவிட்டேனோ? புலம்பிய தங்கம்](https://minnambalam.com/k/2019/07/13/18)**

**[டிஜிட்டல் திண்ணை: திமுக எம்.எல். ஏ.க்களுக்கு லைஃப் செட்டில்மென்ட்- கூல் எடப்பாடி](https://minnambalam.com/k/2019/07/13/72)**

**[அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்!](https://minnambalam.com/k/2019/07/13/17)**

**[நிர்வாகிகள் விலகுவதை தடுக்க…சசிகலா போட்ட பட்ஜெட்!](https://minnambalam.com/k/2019/07/13/7)**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share