வித்தியாசமா ஆடி கொண்டாடும் எடப்பாடி: அப்டேட் குமாரு

Published On:

| By Balaji

இவங்களுக்கு கண்டண்ட் கிடைக்கலங்குறதுக்காக ஆடி மாச அலப்பறைகளை எடுத்து ஓட்டிகிட்டு இருக்காங்க. அதுல போற போக்குல நண்பர் ஒருத்தர் ஆடி மாசத்தையும் தென்காசியை பிரிச்சதையும் கோர்த்துவிட்ருக்காரு.

அப்புறம் இந்த அதிமுக அமைச்சர்கள்ட்ட இருந்து எம்ஜிஆர் பாடல்களை எல்லாம் காப்பாத்தனும்னு பசங்க புலம்பிகிட்டு இருக்காங்க. என்னன்னு கேட்டா பதில் தெரியாத கேள்வியா கேட்டா பழைய பாட்டை பாடி தப்பிச்சுடுறாங்களாம். அதுக்கு நம்மாளு ஒருத்தர் அவங்க வழியிலயே போய் பதில் கொடுத்துட்டாரு. ஒண்ணும் இல்ல பாட்டோட அடுத்த வரியை பாடுறாரு. கீழே இருக்க இந்த பாட்டை மட்டும் எடப்பாடி கேட்டா என்ன ரியாக்‌ஷன் கொடுப்பாருன்னு யோசிச்சுகிட்டு இருக்கேன். நீங்க அப்டேட்டை பாருங்க.

**ச ப் பா ணி**

பர்சின் கனம் குறையும்போது,

மனசின் கனம் அதிகரிக்கிறது.!

**Raghavendra Aara**

ஆடியென்றால் பெண்-மாப்பிள்ளையை பிரித்து வைப்பார்கள். எடப்பாடியோ இரு மாவட்டங்களையே பிரித்துவிட்டார்

**கோழியின் கிறுக்கல்!!**

‘அண்ணா’ என்பவள் அன்பு கொண்ட தங்கை!!

‘டேய் அண்ணா’ பேரன்பு கொண்ட தங்கை!!!

**எந்திரப்புலவன்**

“நான் நல்லா இருக்கேன்மா”

வெளிநாட்டிலிருந்து பேசும்போது சொல்லப்படும் முதல் பொய்

**எனக்கொரு டவுட்டு **

தூங்கி எழுந்து குளிக்கலாமுன்னு எந்திருக்கும்போது இன்னொருத்தர் நான் குளிக்க போறேன்னு சொன்னதும் திரும்ப கிடைக்கிற அந்த சில நிமிட தூக்கத்திற்கு சொர்க்கம் என்று பெயர்..!

**mohanram.ko**

ஒரு ரயில் தண்ணி ஊத்தி, ஒரே பூ பூத்துச்சாம்..

**மித்ரன்**

நடிகர் சந்தானம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழ்நாடு பிராமணர் சங்கம் போலீஸில் புகார் – செய்தி #

என்ன குமாரு ஃப்ரீ பிரமோஷனா..?!

**செந்திலின்_கிறுக்கல்கள்**

திரைப்படத்தில் ரசித்து காதல் செய்தால் கண்டிப்பாக அவர்கள் ஒன்று சேர மாட்டார்கள் என்பது எழுதப்பட்ட விதி!

**எனக்கொரு டவுட்டு **

டிக் டாக் செயலி விரைவில் தடை செய்யப்படும்: தமிழக அரசு உறுதி

# அப்படியே அந்த யூ டியூப் சமையல் வீடியோவும்..!

**கோழியின் கிறுக்கல்!!**

சமூகத்தை திருத்த என்ன செய்யலாம் என்று யோசிக்க தொடங்கும் பொழுது, பசி லேசாய் எட்டி பார்க்கிறது!

இப்படித்தான் பல சமூக ஆர்வலர்கள் தோன்றுவதற்கு முன்பே அழிந்து விடுகிறார்கள்!!

**மித்ரன்**

டிவிட்டர் வந்ததுனால என்னோட நிம்மதியே போச்சு..

செஞ்சுகிட்டு இருந்த தொழிலையும் விட்டுட்டேன்…

அப்படியா என்ன தொழில் செஞ்சுகிட்டு இருந்தீங்க…

வேலை தேடிகிட்டு இருந்தேன்….

**பர்வீன் யூனுஸ்**

தமிழகத்தை அறுபது மாவட்டங்களாகப் பிரிக்க வேண்டும் – அன்புமணி # எட்டு எட்டா பிரிச்சா ரஜினி.. அறுபதா பிரிச்சா அன்புமணி.

**காளையன்..**

ஏசி உள்ளிட்ட 10 அம்சங்கள் இருந்தால் குடும்ப அட்டை சலுகை ரத்து ~ செய்தி

ஒன்பது கிரகங்களும் உச்சம் பெற்ற ஒருவன் தன் ஓட்டலுக்கு ரேஷன் கார்டு இல்லாமலே இலவச அரிசி வாங்கிட முடியும்

**ச ப் பா ணி**

தனிமனிதனுக்கு சட்னி இல்லாதபோது..

சர்க்கரை தொட்டு சாப்பிட வச்சிடுறாங்க

**ரஹீம் கஸ்ஸாலி**

தூத்துக்குடியில் வேன் மீது ஏறி நின்று யாரும் துப்பாக்கி சூடு நடத்தவில்லை. அவ்வாறு துப்பாக்கி சூடு நடத்தியதாக சொல்லப்படுவது ஒரு கற்பனை கதையே!- சட்டசபையில் எடப்பாடி

விட்டால்… தூத்துக்குடியில் நடந்தது சினிமா சூட்டிங்ன்னு சொல்லுவாரு போல….

**அழகிய கவிதை**

கோர்ட்டில் விவாகரத்து கோரி வழக்கு தொடர்ந்த 70 வயது தம்பதி….

நீதிபதி: இந்த வயதில் எதற்கு விவாகரத்து ?

பாட்டி: குறட்டை விட்றாரு ஐயா.

நீதிபதி: அப்போ இவ்வளவு வருசமா குறட்டை விடலையா ?

பாட்டி: அவரு நேத்து தான் செவிட்டு மிஷின் வாங்கி தந்தாரு…

நீதிபதி: ??

**வேலன் **

ஆயிரம் எதிரிகளிடம் வெற்றி கண்டு விட்டுட்டு …!

ஒரே ஒரு துரோகிடம் தோல்வி அடைவது தான் பெரும் தோல்வி…

**calmrade**

யாரோ கேட்டார்கள்,”நீங்கள் பெரியமகான்,தரையில் ஏன்

அமர்ந்துள்ளீர்கள்?” என்று.

புத்தர் சொன்னார்,”தரையில் அமர்பவன் ஒரு போதும் தவறி

“விழமாட்டான்”என்று….

-லாக் ஆஃப்

**

மேலும் படிக்க

**

**[பிக் பாஸ் 3: ஜஸ்ட் லைக் தட் சிறுசுகள்!](https://minnambalam.com/k/2019/07/19/9)**

**[டிஜிட்டல் திண்ணை: ரஜினி Vs ஸ்டாலின் -ஜோதிடர் மூட்டிய கலகம்!](https://minnambalam.com/k/2019/07/18/82)**

**[ அடிக்கப் பாய்ந்த சத்யா – அடக்கிய சேகர்பாபு: சட்டமன்ற காட்சிகள்!](https://minnambalam.com/k/2019/07/18/25)**

**[அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்!](https://minnambalam.com/k/2019/07/13/17)**

**[அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்! – 2](https://minnambalam.com/k/2019/07/13/54)**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share