தி.நகரில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசியது தொடர்பாக திருமுருகன் காந்தி மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி ஸ்டெர்லைட், ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட விவகாரங்கள் மத்திய, மாநில அரசுகளை தொடர்ந்து விமர்சித்துவருகிறார். இதுதொடர்பாக அவர் மீது பல்வேறு வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சில மாதங்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்தார். அவருக்கு சிறை உணவில் பாதரசம் கலந்துகொடுக்கப்பட்டிருக்கலாம் என்று மே 17 இயக்கம் குற்றம்சாட்டியிருந்தது.
இந்த சூழலில் இலங்கையில் நடந்த இனப்படுகொலையில் கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மே 17 இயக்கத்தின் சார்பில் கடந்த 19ஆம் தேதி சென்னை தி.நகரில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. அதில் மத்திய, மாநில அரசுகளை கடுமையாக தாக்கிப் பேசியிருந்தார். இந்நிலையில் விதிமுறைகளை மீறி பேசியதாக திருமுருகன் காந்தி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 153(A), 505(2) ஆகிய பிரிவுகளின் கீழ் அவர் மீது மாம்பலம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மே 17 இயக்கம் தனது முகநூல் பக்கத்தில், “திருமுருகன் காந்தி பேசும் அனைத்து கூட்டத்திற்கும் ஏதேனும் ஒரு வழக்கை பதிவு செய்ய வேண்டும் என்கிற அழுத்தத்தின் அடிப்படையில் தொடர்ந்து அவர் மீது பொய்யான பல வழக்குகள் பதிவு செய்யப்படுகிறது. இது கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது” என்று கண்டனம் தெரிவித்துள்ளது.
மேலும், “நாக்கை அறுப்பேன் என்ற ராஜேந்திர பாலாஜி மீதும், எப்போதும் இஸ்லாமியர்கள் மீது வெறுப்பை விதைத்து இரு சமூகங்களிடையே பதற்றத்தை உருவாக்கும் வகையில் பேசும் எழுதும் ஹெச். ராஜா போன்ற நபர்கள் மீதும் பாயாத வழக்கு. திருமுருகன் காந்தி மீது மட்டும் பாயுமென்றால், இந்த அரசு பிஜேபியின் அடிமை அரசாகத்தான் இருக்கிறது என்பதற்கு இதைவிட என்ன ஆதாரம் வேண்டும்” என்றும் விமர்சித்துள்ளது. இவ்வழக்கையும் துணிவுடன் எதிர்கொள்வோம் என்றும் அதில் கூறியுள்ளனர்.
.
.
**
மேலும் படிக்க
**
.
. **
[வளர்மதியிடம் சீறிய எடப்பாடி](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/21/27)
**
.
**
[எக்சிட் போல்: பிரபல ஊடகங்களின் சறுக்கல்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/21/56)
**
.
**
[தெற்கில் பாஜகவைப் பின்னுக்குத் தள்ளுமா காங்கிரஸ்?](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/21/32)
**
.
**
[சோனியா திடீர் உற்சாகம்: காரணம் என்ன?](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/20/16)
**
.
**
[டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலினுக்கு அமித் ஷா தூது!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/20/82)
**
.
.
�,”