அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரிகளில் விடைத்தாள் மறுமதிப்பீடு தொடர்பான வழக்கின் விசாரணையை லஞ்ச ஒழிப்புத் துறையினர் மேற்கொண்டுள்ளனர்.
2017ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்வின் விடைத்தாள்களை மறுமதிப்பீடு செய்ய சுமார் 3 லட்சம் பேர் விண்ணப்பித்த நிலையில்,73 ஆயிரம் பேருக்கு கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்பட்டன. 10 ஆயிரம் ரூபாய் வீதம் லஞ்சம் பெற்று மாணவர்களைத் தேர்ச்சி பெறச் செய்ததாகவும் 240 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடைபெற்றதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தேர்வு கட்டுப்பாட்டாளர் உமா உள்ளிட்ட மூன்று பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பான வழக்கை விசாரித்து வரும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தேர்வு கட்டுப்பாட்டாளர் உமா, உதவிப்பேராசிரியர் சிவகுமார் மற்றும் திண்டிவன கல்லூரி முதல்வர் விஜயகுமார் ஆகியோர் உள்ளிட்டோருக்கு நேரில் ஆஜராக சம்மன் அனுப்பியுள்ளனர்.
இந்நிலையில், இன்று (ஆகஸ்ட் 31) ஆலந்தூர் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் பேராசிரியரும் திண்டிவன கல்லூரி முதல்வருமான விஜயகுமார் நேரில் ஆஜாராகி விளக்கம் அளித்துள்ளார். இந்த முறைக்கேட்டின் முக்கியமான நபராக கருதப்படும் திண்டிவன மையத்தின் முக்கிய பொறுப்பில் இருக்கும் இவரிடமிருந்து விசாரணையை தொடங்கியுள்ளது. ஏனென்றால், விஜயகுமாருக்குத்தான் மாணவர்களின் டம்மி நம்பர் எது ஒரிஜினல் நம்பர் எது என்று தெரியும். மேலும், எந்தந்த மாணவர்கள் எவ்வளவு பணம் கொடுத்தார்கள் போன்ற அனைத்து விஷயங்களும் இவருக்கு தான் தெரியும் என்ற காரணத்தினால், இவரை லஞ்ச ஒழிப்புத்துறையினர் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இவர் கொடுக்கும் வாக்குமூலத்தின் அடிப்படையில் தான் அடுத்தடுத்த விசாரணைகள் தொடரும் என்று தகவல் வெளியாகியுள்ளது.�,