�விஜய் மல்லையாவுக்குச் சொந்தமான கோவாவில் இருக்கும் சொகுசு பங்களா ரூ.73 கோடிக்கு ஏலம் விடப்பட்டுள்ளது. விஜய் மல்லையாவின் பல ஆயிரம் கோடி வாராக்கடனை வசூலிக்கும் நோக்கில் ஸ்டேட் பேங்க் அவர் பங்களாவை ஏலம் விட்டுள்ளது.
கிங்ஃபிஷர் நிறுவனத்தின் உரிமையாளர் விஜய் மல்லையா கடந்த ஆண்டு, பல ஆயிரம் கோடி ரூபாய் கடனைத் திருப்பி செலுத்தவில்லை. இந்நிலையில், அவர் லண்டன் சென்றுவிட்டார். கடன் தொகையை வசூலிக்க முடியாத வங்கிகள், மல்லையாவின் சொத்துகளை ஏலம்விட்டு கடன் தொகையை வசூலிக்க முடிவு செய்தது.
அதன்படி விஜய் மல்லையாவுக்குச் சொந்தமான கோவாவில் இருக்கும் சொகுசு பங்களாவை ஏலம் விட முடிவு செய்தனர். இதற்குமுன் இரண்டு முறை ஏலம் விட முடிவு செய்யப்பட்டது. ஆனால், வாங்குவதற்கு யாரும் முன்வரவில்லை. இந்நிலையில், தற்போது ரூபாய் 73 கோடிக்கு மல்லையாவின் பங்களா ஏலம் விடப்பட்டுள்ளது.
இதற்கு முன் 85 மற்றும் 81 கோடி ரூபாய் என நிர்ணயிக்கப்பட்ட ஏலத்தொகை இம்முறை குறைக்கப்பட்டது. பாலிவுட் நடிகரும் தொழிலதிபருமான சச்சின் ஜோஷி, மல்லையாவின் பங்களாவை வாங்கியுள்ளார். இந்த சொகுசு பங்களா, விஜய் மல்லையாவின் முக்கிய விருந்து நிகழ்ச்சிகளுக்குப் பயன்படுத்தப்பட்டு வந்தது.�,