அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய படம் குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகிவருகின்றன.
முன்னணி கதாநாயகர்களின் படங்கள் உருவாகும் போது படக்குழு படத்தின் போஸ்டர்கள், புகைப்படங்கள் ஆகியவற்றை வெளியிடும் முன்னரே படப்படிப்பு தளத்தில் எடுக்கப்படும் படங்கள் ரசிகர்களால் பரவிவிடுகின்றன.
ரஜினி நடிக்கும் தர்பார் படத்தின் போஸ்டர் வெளியாகும் முன்னரே ரஜினியின் கதாபாத்திரத்தை விவரிக்கும் விதமான புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியானது. அதைத் தொடர்ந்து படக்குழு உடனடியாக போஸ்டரை வெளியிட்டது. அதன்பின் ரஜினி, நயன்தாரா, யோகிபாபு ஆகியோர் பங்குபெறும் காட்சிகளின் படங்களும் வெளியாகின.
அதே போல் விஜய் நடிக்கும் பெயரிடப்படாத புதிய படத்தின் மீது ஒட்டுமொத்த திரையுலகத்தின் பார்வையும் திரும்பியுள்ளது. இதனால் படம் பற்றிய முக்கிய தகவல்கள் வெளியாகிவருகின்றன. படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் ஏற்கெனவே வெளியான நிலையில் தற்போது விஜய் ஏற்று நடிக்கும் கதாபாத்திரத்தின் பெயர் தெரியவந்துள்ளது.
அப்பா – மகன் என இரு வித தோற்றங்களில் விஜய் இதில் நடிக்கிறார் என்று முதல்கட்ட தகவல் வெளியான நிலையில் மகன் கதாபாத்திரத்துக்கு ‘பிகில்’ எனப் பெயரிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கதிர் நடிக்கும் பாத்திரத்துக்கு மைக்கேல் எனப் பெயரிடப்பட்டுள்ளது.
பெண்கள் கால்பந்து அணியின் பயிற்சியாளராக விஜய் நடிக்க அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இந்துஜா, ரெபா மோனிகா ஜான் உள்ளிட்ட இளம் நடிகைகள் பலர் கால்பந்தாட்ட வீராங்கனைகளாக நடிக்கின்றனர். யோகி பாபு, விவேக், கதிர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
**
மேலும் படிக்க
**
**
[மத்திய அமைச்சரவையில் திமுக? டி.ஆர்.பாலு](https://minnambalam.com/k/2019/06/09/52)
**
**
[செக்ஸுக்கு பிறகு சக்தியாய் உணரும் இந்தியப் பெண்கள்!](https://minnambalam.com/k/2019/06/09/36)
**
**
[ஓபிஎஸ்சை கை கழுவும் கேபிஎம்](https://minnambalam.com/k/2019/06/09/53)
**
**
[முகிலன் இருக்கிறார்!](https://minnambalam.com/k/2019/06/10/20)
**
**
[பொதுவெளியில் எம்.எல்.ஏ.க்கள் கருத்து சொல்வதா? எடப்பாடி, பன்னீர்](https://minnambalam.com/k/2019/06/09/49)
**
�,”