விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் ராதாமணி உடல்நலக் குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 67.
விக்கிரவாண்டி தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினரான ராதாமணி, கடந்த சில ஆண்டுகளாக புற்றுநோயால் அவதிப்பட்டுவந்தார். அதற்காக சென்னை உள்ளிட்ட இடங்களில் சிகிச்சையும் மேற்கொண்டு வீடு திரும்பினார். நேற்று அவரது உடல்நிலை மோசமானதையடுத்து, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி இன்று (ஜூன் 14) அதிகாலை காலமானார்.
விழுப்புரம் மாவட்டம் கலிஞ்சிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராதாமணி. அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் எம்.ஏ வரை படித்துள்ள இவர் திருமணம் செய்துகொள்ளவில்லை. திமுகவில் ஒன்றியச் செயலாளர், மாவட்டத் துணைச் செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்துள்ளார். தற்போது விழுப்புரம் மத்திய மாவட்ட அவைத் தலைவராக இருந்துவந்தார். 2011 சட்டமன்றத் தேர்தலில் விக்கிரவாண்டி தொகுதியில் தோல்வியைத் தழுவிய அவர், 2016 தேர்தலில் அதே தொகுதியில் 63,757 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார்.
ராதாமணியின் உடல் தற்போது புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக விரைந்துள்ளனர்.
**
மேலும் படிக்க
**
**[டிஜிட்டல் திண்ணை: எடப்பாடியை டென்ஷன் ஆக்கிய தினகரன்- வாய்ப்பூட்டு பின்னணி!](https://minnambalam.com/k/2019/06/13/76)**
**[மூடப்படும் அருவிகள்: கேரளத்தில் பண மழை!](https://minnambalam.com/k/2019/06/14/20)**
**[பாக்கியராஜ் அணிக்கு விஜயகாந்த் ஆதரவு!](https://minnambalam.com/k/2019/06/13/44)**
**[அதிமுக: அந்த 11 பேர் குழுவில் யார் யார்?](https://minnambalam.com/k/2019/06/13/22)**
**[பசங்கதான் பொண்ணுங்கள தெரிஞ்சிக்கணும்: அஜித்](https://minnambalam.com/k/2019/06/13/70)**
�,”