8குப்புசாமி: டேய் மாப்ள… ‘I don’t Know’ன்னா என்னடா அர்த்தம்?
முனுசாமி: ‘எனக்குத் தெரியாது’டா.
குப்புசாமி: என்னடா இது… யாரைக் கேட்டாலும் ‘எனக்குத் தெரியாது’, ‘எனக்குத் தெரியாது’ன்னு சொல்றீங்க… அதென்ன அவ்வளவு கஷ்டமான வார்த்தையா?
இதே மெசேஜ், நான் 12ஆவது படிக்கும்போது நோட்டுல எழுதி காட்டினாங்க. இதுவே இன்னமும் சுத்திக்கிட்டு இருக்கு.
“நிஜமாத்தான் சொல்றீங்களா… டாக்டர் என் மனைவியைக் காப்பாத்த வழியே இல்லையா?”
“யோவ், உனக்கு இதைக் கேக்க கேக்க சந்தோஷமா இருக்கலாம். அதுக்காக நான் எத்தனை தடவை திரும்ப திரும்ப அதையே சொல்லிக்கிட்டு இருக்கிறது?”
இதுவும் கார்ட்டூன் காலத்துலேயே வந்துடுச்சு. காசு குடுத்தாலும் சிரிக்க மாட்டோம்.
“எவனோ ராக்கம்மா வீட்டுலேர்ந்து தெனமும் எகிறி குதிச்சு ஓடுறானாம்டியேய்”ங்கிறதுக்கு ஒண்ணும் குறைச்சலில்லை. பெட்ரோல், டீசல் விலை குறைஞ்சிடுசுன்னு கெளப்பிவிட்டுக்கிட்டு இருக்காங்க ஒருபக்கம். அந்த சோடா பாட்டில் விவகாரத்துல மன்னிப்பு கேட்டுட்டாராமே… இல்லையே… எனக்கு வீடியோ வரலையே? கேட்டியாக்கா சேதியன்னு ஒருபக்கம் ஓடுது.
ராஜசிம்ம பல்லவனுக்கு நித்ய விநோதன்னு ஒரு பட்டம் உண்டு. அதை டெவலப் பண்ணி நித்யானந்தா அந்த காலத்துலயே உள்ளவர். மறுபிறப்பு. மா நித்யா தேவகின்னு ஒரு குரூப் கிளம்பியிருக்கு.
இன்னொரு பக்கம் யார் அந்த நித்யா அப்படின்னு விநோதமான ஆராய்ச்சியில இறங்கிட்டாங்க.
வரலாற்றையாச்சும் விட்டு வைங்கய்யா… ஒரு ஸ்டேட்டஸ் வைக்க விடறீங்களா?
�,