தண்ணீரை வீணாக்காதீர்கள்னு ஆயிரத்தெட்டு அட்வர்டைஸ்மெண்ட் போட்றதுக்கு செலவு பண்ற காசை, தண்ணி லாரிக்கு செலவு பண்ணி சிந்தாம சிதராம கொண்டுபோனாலே பாதி சென்னைக்கு தண்ணி கொடுத்துரலாம் போல. தேவையில்லாம செலவு பண்றதுக்கு பதிலா, ரூம் எடுத்து தங்கியிருக்க பேச்சுலர் பசங்க ரூம்ல கேமரா ஒண்ணு வெச்சா போதும், தண்ணியை எப்படி சேமிக்கிறதுன்னு அழகா கத்துக்கலாம். இப்படித்தான் ஒருத்தண்ட கேட்டேன். ரெண்டு மக் தண்ணில குளிச்சிட்டு ஆஃபீஸ் வந்துட்டேன்னு பெருமையா சொல்றான். ஏண்டா, ஆஃபீஸ்ல யார் பக்கத்துலயாச்சும் போனா நாராதான்னு கேட்டா, ‘என் மேனேஜர் சென்னைக்கு வந்ததுக்கு அப்பறம் தான் குளிக்கவே ஸ்டார்ட் பண்ணார். அவர் அப்பார்ட்மெண்ட்ல டொண்டி ஃபோர் அவர்ஸ் தண்ணி வருதாம்டா’ அப்டின்றான். இப்டிலாம் நடக்கும்னு தான் நான்லாம் அவுட்டர் சென்னைக்கு போயிட்டேன்னு சொன்னதுக்கு, நீயெல்லாம் இடம் குடுத்ததால தான் என் மேனேஜரெல்லாம் கேள்வி கேக்குற நிலைமைக்கு வந்துட்டான்’ அப்டின்றான். இவன் குளிக்காததுக்கும், மேனேஜர் திட்றதுக்கும்கூட சென்னையை தான் காரணம் சொல்லுவானுங்க போல. சரி, நான் ரெண்டு கேன் தண்ணி வாங்கிட்டு வீட்டுக்கு கிளம்புறேன். அப்டேட்டைப் படிச்சிட்டு, நீங்களும் ரெண்டு மக் தண்ணில குளிச்சவங்களா இருந்தா இதை லைக் பண்ணுங்க, ஷேர் பண்ணுங்க.
**உள்ளூராட்டக்காரன்**
என்னுடைய பாடலால் தானே நீங்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறீர்கள்
– இசை தெய்வம்
என் காமெடிக்கு வாய்விட்டு சிரிப்பதனால் தானே நீங்கள் நோயின்றி வாழ்கிறீர்கள்
– காமெடி தெய்வம்
என்னை கல்யாணம் செய்த பிறகு தானே நீங்க நல்ல சோறு சாப்பிடுகிறீர்கள்
– வீட்டு தெய்வம்
**பரட்டை**
காதலிக்கும் போது என் மனைவி ஸ்காலர்ஷிப் பணம் தொலைஞ்சு போச்சுன்னு வீட்ல சொல்லிட்டு ஒரு பவுன் செயின் வாங்கி கொடுத்தாங்க…
இன்னமும் கழுத்துல போட்டுக்கிட்டு சுத்தறேன்….
**இரா.சரவணன்**
ஒரு விவசாயி சொன்ன தகவல் வியக்க வைத்தது:
“பனம் பழத்தில் கொட்டை ஒற்றையாக இருந்தால் அது பெண் பனை. இரட்டையாக இருந்தால் ஒன்று ஆண்; மற்றொன்று பெண். மூன்றாக இருந்தால் இரண்டு ஆண், ஒன்று பெண்”
ஆணோ பெண்ணோ, அரை அடி ஆழம் தோண்டி புதைத்தால் போதும், பனை விருட்சமாகும்!
**நான்**
இந்த நாடுல இப்படித்தான் இருக்கும்னு நல்லா தெரிஞ்சும் இங்க வோர்ல்ட் கப் நடத்துறது முட்டாள்தனம். ஆல்ரெடி 3 மேட்ச் வாஷ்-அவுட். இன்னும் நிறைய பாதிக்கப்படும். யாரு கப் ஜெயிச்சாலும் அது முழுமையான உலக கோப்பை கிடையாது. நடக்கற ஒன்னு ரெண்டு மேட்சுலயும் ஆயிரத்தெட்டு அம்பயரிங் தப்பு வேற..
**கோழியின் கிறுக்கல்!!**
நாம ஒரு நாள் லீவ் கேட்டா போதும், நம்ம மேலதிகாரி ராமானுஜருக்கு மேலே கணக்கு போட்டு பார்ப்பாரு!!!
**அஜ்மல் அரசை®**
ஹிந்தி கற்காததால் தமிழகம் 50 வருடம் பின்தங்கியுள்ளது-தந்தி டிவி சர்வே
சர்வே எடுங்கடான்னா சவுகார்பேட்டையிலேயே மூனு நாளா விழுந்து கிடக்கிறானுக…
**mohanram.ko**
மனைவிக்கு ‘கீழ்படிந்து நிற்பதைதான்’ understanding னு ஆங்கிலத்தில் சொல்றாங்க
**செந்திலின்_கிறுக்கல்கள்**
பெண்ணே பெண்ணை பார்த்து பொறாமை படும் இடம் கல்யாண வீடு!
**எனக்கொரு டவுட்டு**
அம்மாவின் சாப்பாட்டை குறை சொன்னவர்க்கு ஹோட்டல் சாப்பாடு தந்து தண்டித்து விடுகிறது வாழ்க்கை..!!!
**ரஹீம் கஸ்ஸாலி**
“அதிமுகவின் உட்கட்சி பூசலுக்கு திமுகவே காரணம்!” -ஜெயக்குமார்
அதிமுகவினர் எப்போதும் சொல்லும் இரண்டு வார்த்தைகள்…
ஒன்று… எல்லாத்தையும் மேலே இருக்கவர் (மோடி) பார்த்துப்பார்.
இன்னொன்று… எல்லாத்துக்கும் திமுகதான் காரணம்
**மெத்த வீட்டான்**
ராஜராஜசோழன் பற்றி ரஞ்சித் சொன்னது சரியா தவறான்னு ஆராய வரலாற்று ஆய்வுகளை எல்லாம் புரட்ட தேவை இல்லை..
H.ராஜா ,எஸ்.வி.சேகர், அக்கா தமிழிசை &கோ எதிர்ப்பு தெரிவித்தால் ரஞ்சித் சொன்னது சரின்னு எடுத்துக்க வேண்டியதுதான் !
**mohanram.ko**
யூ ட்யூப் சமையலில்….
கற்றது- கையளவு
கல்லாதது – தேவையான அளவு
**சிலந்தி™**
பேசி புரியவைப்பதற்குள் அழுகை வந்து விட்டால், மொத்தமும் வீண் தான்..!!
**நட்சத்திரா**
சில நேரங்களில் நினைவுகளைப் போல கொடிய ஆயுதம் எதுவுமில்லை
**கவிமணி™**
டிவிட்டர்ல காதலிக்கரவங்கல விட டிவிட்டர் மேலயே காதலா இருப்பாங்க.
சிலர் இங்கயே எந்நேரமும் இருக்காங்கயா
**ச ப் பா ணி**
எல்லா நாளும் சம்பள நாளை நோக்கியே.!
**Mani Pmp**
கிரேஸி மோகனின் காமெடித் தொகுப்பு:
இப்பதானே தேள் கொட்டிடுச்சினு மருந்து வாங்கிட்டுப் போனீங்க?மறுபடி வந்து இருக்கீங்களே, எதற்கு?
இப்ப மருந்து கொட்டிடுச்சி.
*
என் மனைவிக்கு தெரியாம நான் அவ பீரோவை திறந்ததை அவ பார்த்திட்டா…!!
அய்யோ…!! அப்பறம்?
“சாத்திட்டா”
*
கடல்ல மூழ்கி தற்கொலை பண்ணிக்கப்போன பொண்ணைக்
காப்பாத்தினியே, அவ இப்போ எப்படி இருக்கா?
முழுகாம இருக்கா..!!!???….
*
DOCTOR : கண் ஆபரேஷனுக்கு அப்புறம் உங்களுக்கு எப்படி
இருக்கு?
போயும் போயும்v இந்த நர்ஸையா சைட் அடிச்சோம்னு
தோணுது டாக்டர்…!
*
“எம்பிளாய்மெண்ட் ஆபிசிலே நீ பதியறதுக்கு, உன்னோட அப்பா, தாத்தாவையும் கூட்டிட்டு வந்திருக்கியே! ஏன்?”
“அப்பாவுக்குப் புதுப்பிக்கணும்… எங்க தாத்தாவுக்கு முதல் இண்டர்வியூ வந்திருக்கு!”
*
வரதட்சணையே வாங்கிட்டு கல்யாணம் செஞ்சது என் மனசை உறுத்திக்கிட்டே இருக்குது!
அதனால…?
வரதட்சணையே வாங்காம இன்னொரு கல்யாணம் செய்துகிட்டு பிராயச்சித்தம் செய்யப் போறேன்!
*
“தம்பி உங்க பக்கத்து வீட்டு பெண் பாமாவை எங்க பையனுக்கு கேட்கலாம்னு இருக்கோம், பொண்ணு எப்பிடி?”
“நான் காதலிச்ச வரைக்கும் அந்த பொண்ணு நல்ல பொண்ணுதான் சார்”
*
ஹீரோவுக்கும் தயாரிப்பாளருகும் என்ன வித்தியாசம்?
ஏழையா இருந்த ஹீரோ க்ளைமாக்ஸில்
கோடீஸ்வரனாகி விடுவான்,
கோடீஸ்வரனா இருந்த தயாரிப்பாளர், க்ளைமாக்ஸ்ல
ஏழையாயிடுவாரு…!
*
“தினமும் காலையும், மாலையும் வந்து ஸ்டேசன்ல கையெழுத்து போட்டுட்டு போகணும் தெரியுதா?”
“சரிங்கய்யா, அப்புறம் வழக்கம் போலத் திருடப் போகலாமில்லே ஐயா?”
*
உங்க மனைவிய அடிக்கடி சினிமா பார்க்க தியேட்டருக்குக் கூட்டிக்கிட்டுப் போறீங்களே…..? அவங்க மேல அவ்வளவு பிரியமா?
அட நீங்க ஒண்ணு… மூணு மணி நேரம் அவ பேசாம இருப்பாள்ல!!!
-லாக் ஆஃப்.
**
மேலும் படிக்க
**
**
[அதிமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்!](https://minnambalam.com/k/2019/06/11/26)
**
**
[டிஜிட்டல் திண்ணை: எம்.எல்.ஏ.க்கள் பலம்: அதிமுகவில் மோதிக்கொள்ளும் மா.செ.க்கள்!](https://minnambalam.com/k/2019/06/10/66)
**
**
[கலெக்டர் ரோகிணியை எகிறிய எடப்பாடி](https://minnambalam.com/k/2019/06/10/46)
**
**
[மோடிக்கு வானம் கொடுத்த பாகிஸ்தான்](https://minnambalam.com/k/2019/06/11/21)
**
**
[செக்ஸுக்கு பிறகு சக்தியாய் உணரும் இந்தியப் பெண்கள்!](https://minnambalam.com/k/2019/06/09/36)
**
�,”