மதுரை திருப்பரங்குன்றத்தில் வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு ஜெராக்ஸ் மெஷின் கொண்டுசெல்லப்பட்டதற்கு திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இந்தியா முழுவதும் வாக்கு எண்ணிக்கை நாளை மறுநாள் நடைபெறவுள்ள சூழலில், அதற்கான ஆயத்தப் பணிகளில் அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 19ஆம் தேதி நடந்து முடிந்த திருப்பரங்குன்றம் இடைத் தேர்தல் வாக்குப் பதிவு இயந்திரங்கள் மதுரை மருத்துவக் கல்லூரியிலுள்ள ஒரு அறையில் வைக்கப்பட்டிருந்தன. இன்று (மே 21) மாலை 3 மணிக்கு அந்த பகுதிக்கு ஊழியர்கள் சிலர் ஜெராக்ஸ் மெஷினை கொண்டுசென்றுள்ளனர்.
தகவலறிந்து உடனே விரைந்து வந்த திமுக வேட்பாளர் சரவணன் உள்ளிட்டோர், ஜெராக்ஸ் மெஷினை கொண்டு செல்ல எதிர்ப்பு தெரிவித்தனர். தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெறாமல் மெஷினை கொண்டுசெல்வதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய திமுக வேட்பாளர் சரவணன், “திருப்பரங்குன்றம் தொகுதி வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மதுரை மருத்துவக்கல்லூரி வளாகத்திற்குள் முன்னறிவிப்பு இன்றி ஜெராக்ஸ் இயந்திரம் கொண்டுசெல்ல அதிகாரிகள் முயற்சி செய்கின்றனர். வாக்கு எண்ணும் மையத்தில் பயன்படுத்தப்படும் இயந்திரங்கள் குறித்து எந்த தகவலும் எங்களுக்கு தரப்படவில்லை. இது தொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் அளிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
ஆனால், “வாக்கு எண்ணும் மையத்திற்கு தேவையான இயந்திரங்கள் கொண்டுசெல்லப்படுவது இயல்பானதே. உரிய அனுமதி பெற்றே ஜெராக்ஸ் மெஷின், வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டுசெல்லப்படுகிறது” என்று மதுரை தேர்தல் நடத்தும் அலுவலர் நாகராஜன் விளக்கம் அளித்துள்ளார்.
ஏற்கனவே மதுரை மக்களவைத் தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் வைக்கப்பட்டிருந்த நிலையில், மையத்தில் நுழைந்த கலால் வரி வட்டாட்சியர் சம்பூரணம் ஆவணங்களை எடுத்துச் சென்று ஜெராக்ஸ் எடுத்து வந்தது பரபரப்பை உண்டாக்கியது. இதுதொடர்பாக மதுரை தேர்தல் அதிகாரி நாகராஜனும் மாற்றப்பட்டார். இந்த நிலையில்தான் வாக்கு எண்ணும் மையத்திற்கு ஜெராக்ஸ் மெஷின் கொண்டுவரப்பட்டதற்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
.
.
**
மேலும் படிக்க
**
.
. **
[வளர்மதியிடம் சீறிய எடப்பாடி](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/21/27)
**
.
**
[எக்சிட் போல்: பிரபல ஊடகங்களின் சறுக்கல்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/21/56)
**
.
**
[தெற்கில் பாஜகவைப் பின்னுக்குத் தள்ளுமா காங்கிரஸ்?](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/21/32)
**
.
**
[சோனியா திடீர் உற்சாகம்: காரணம் என்ன?](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/20/16)
**
.
**
[டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலினுக்கு அமித் ஷா தூது!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/20/82)
**
.
.
�,”