வாக்கு எண்ணிக்கை: தேர்தல் அதிகாரியிடம் திமுக மனு!

Published On:

| By Balaji

வாக்கு எண்ணிக்கை தொடர்பான கோரிக்கைகளை வலியுறுத்தி திமுக சார்பில் தலைமை தேர்தல் அதிகாரியிடம் இன்று மனு அளிக்கப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை மறுநாள் மே 23ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. வாக்கு எண்ணிக்கையின்போது மத்திய, மாநில அரசுகள் முறைகேடுகளில் ஈடுபட வாய்ப்புள்ளதாகவும், கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்திவருகின்றன. கோவை, ராமநாதபுரம், கரூர், தேனி உள்ளிட்ட நான்கு தொகுதிகளிலும் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக அதிமுக-பாஜக கூட்டணிக் கட்சியினர் எந்த எல்லைக்கும் செல்லத் தயாராக இருக்கிறார்கள். எனவே இந்த 4 தொகுதிகளிலும் வாக்கு எண்ணும்போது திமுகவினர் கவனமுடன் செயல்பட வேண்டும் என்று திமுக முகவர்களுக்கு அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

இந்த நிலையில் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாஹுவை இன்று (மே 21) திமுக முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் சந்தித்து வாக்கு எண்ணிக்கை தொடர்பாக 6 கோரிக்கைகள் அடங்கிய மனுவினை அவரிடம் சமர்பித்தனர். அந்த மனுவில் வாக்கு எண்ணிக்கை நேர்மையாக, நியாயமாக நடைபெற நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மேலும் வாக்கு எண்ணும் மையங்களில் முகவர்களை அனுமதிக்க வேண்டும். ஒப்புகை சீட்டை சரிபார்க்கும் போது முகவர்கள் உடனிருக்க அனுமதிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.எஸ்.பாரதி, “வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் உள்ளே செல்ல அனுமதித்துள்ளார்கள். நாங்கள் மனு அளித்ததன் பேரிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனை அனைத்து தேர்தல் அதிகாரிகளுக்கும், ஊடகங்களுக்கும் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டோம். மேலும் ஒவ்வொரு சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவின்போதும் எந்தெந்த வேட்பாளருக்கு எவ்வளவு வாக்குகள் பதிவாகியுள்ளன என்பதற்கு ஜெராக்ஸ் காப்பி அல்லது கார்பன் காப்பி அளிப்பதாக ஒப்புக்கொண்டனர். விவிபாட்டில் பதிவாகியுள்ள வாக்குகளை எண்ணும்போது தனி முகவர்களை நியமிக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரினோம். அதற்கும் எங்களுடைய கோரிக்கையை ஏற்றுக்கொண்டனர். தேர்தல் ஆணையம் இன்று சொல்வதையெல்லாம் வைத்துப் பார்க்கும்பொது நடுநிலையோடு செயல்படும் என்று நம்புகிறோம்” என்றார்.

மேலும், “அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி வாக்கு எண்ணிக்கை சிறிய அறையில் நடத்தப்படுகிறது. அங்கு 64 வேட்பாளர்கள் உள்ளனர். முகவர்களே பலர் இருப்பார்கள் என்பதால் பெரிய அறைக்கு வாக்கு எண்ணிக்கையை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம். அதனை ஏற்று வேறு அறைக்கு மாற்றியுள்ளனர்” என்று தெரிவித்தார்.

.

.

**

மேலும் படிக்க

**

.

. **

[வளர்மதியிடம் சீறிய எடப்பாடி](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/21/27)

**

.

.

**

[தெற்கில் பாஜகவைப் பின்னுக்குத் தள்ளுமா காங்கிரஸ்?](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/21/32)

**

.

**

[சோனியா திடீர் உற்சாகம்: காரணம் என்ன?](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/20/16)

**

.

**

[டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலினுக்கு அமித் ஷா தூது!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/20/82)

**

.

**

[சென்னை: மனிதப் பிழையால் உருவான தண்ணீர்ப் பஞ்சம்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/19/9)

**

.

.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share