வாக்கு எண்ணிக்கையின்போது கலவரத் திட்டம்: அமமுக புகார்!

public

அனைத்து வாக்கு எண்ணும் மையங்களிலும் கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று அமமுக சார்பில் தேர்தல் அதிகாரியிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் மக்களவைத் தேர்தல் முடிவுகள் நாளை மே 23ஆம் தேதி வெளியாகவுள்ளன. வாக்கு எண்ணிக்கை மையத்தில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் ஸ்டாலின், அமமுக பொதுச் செயலாளர் தினகரன் உள்ளிட்டோர் தத்தமது கட்சிகளுடைய முகவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர். வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆறு கோரிக்கைகளை வலியுறுத்தி திமுக சார்பில் தேர்தல் அதிகாரியிடம் மனுவும் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹுவை நேற்று (மே 21) அமமுக சார்பில் சந்தித்த முன்னாள் எம்.எல்.ஏ வெற்றிவேல், வாக்கு எண்ணிக்கை தொடர்பாக மனு அளித்தார். அதில், “அனைத்து வாக்கு எண்ணும் மையங்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும். கூடுதல் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பில் ஈடுபட வேண்டும். வாக்கு எண்ணிக்கை குளறுபடி இல்லாமல் நடுநிலையோடு நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த வெற்றிவேல், “ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையின்போது முதல் இரண்டு மணி நேரத்தில் எவ்வளவு பிரச்சினை நடைபெற்றது என்று பார்த்தோம். அதிமுகவினர் வாக்கு இயந்திரத்தை உடைக்கச் சென்றார்கள், அங்கிருந்தவர்களை அடிக்கச் சென்றார்கள். எனவேதான் கூடுதல் பாதுகாப்பு கேட்டு மனு அளித்துள்ளோம். உரிய பாதுகாப்பு வழங்குவதாகவும், சிசிடிவி கேமராக்கள் சரியாக இயங்குவதை உறுதி செய்வோம் எனவும் தேர்தல் அதிகாரி உறுதியளித்துள்ளார்” என்று தெரிவித்தார்.

வாக்கு எண்ணிக்கையை நிறுத்துவதற்காக அதிமுகவினர் கலவரத்தை ஏற்படுத்த நினைக்கிறார்கள். எங்கெல்லாம் சொற்ப ஓட்டுக்கள் வித்தியாசத்தில் தோற்போமோ அங்கெல்லாம் கலவரத்தை உண்டாக்க முயற்சி செய்வார்கள் என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

.

.

**

மேலும் படிக்க

**

.

.

**

[டிஜிட்டல் திண்ணை: சசிகலாவை சந்தித்த இபிஎஸ் மனைவி ராதா-ஓபிஎஸ் மனைவி விஜயலட்சுமி](https://minnambalam.com/k/2019/05/21/93)

**

.

. **

[வளர்மதியிடம் சீறிய எடப்பாடி](https://minnambalam.com/k/2019/05/21/27)

**

.

**

[இடைத்தேர்தல் கணிப்பு: முந்துவது யார்?](https://minnambalam.com/k/2019/05/21/90)

**

.

**

[எக்சிட் போல்: பிரபல ஊடகங்களின் சறுக்கல்!](https://minnambalam.com/k/2019/05/21/56)

**

.

**

[சோனியா திடீர் உற்சாகம்: காரணம் என்ன?](https://minnambalam.com/k/2019/05/20/16)

**

.

.

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *