வளைகுடா நாடுகளில் துன்புறுத்தப்படும் இந்தியத் தொழிலாளர்கள்!

Published On:

| By Balaji

வளைகுடா நாடுகளில் பணிபுரியும் இந்திய தொழிலாளர்கள் துன்புறுத்தப்படுவதாக அவர்கள் தரப்பிலிருந்து இதுவரையில் 9,771 புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

வளைகுடா நாடுகளில் பணிபுரியும் இந்திய தொழிலாளர்கள் துன்புறுத்தப்படுவது குறித்து மக்களவையில் இன்று (ஜூலை 17) கேரள எம்.பி டீன் குரியகோஸ் கேள்வியெழுப்பினார். அதற்கு வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், “இந்தாண்டில் ஜூன் 6ஆம் தேதி வரையில் வளைகுடா நாட்டில் பணிபுரியும் தொழிலாளர்களிடமிருந்து மொத்தம் 9,771 புகார்கள் வந்துள்ளன. அதிகபட்சமாக குவைத் நாட்டிலிருந்து 2377 புகார்கள் வந்துள்ளன. அடுத்தபடியாக சவுதி அரேபியாவிலிருந்து 2244 புகார்களும், ஓமனிலிருந்து 1764 புகார்களும் வந்துள்ளன.

ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து 1477 புகார்களும், கத்தாரிலிருந்து 1459 புகார்களும் வந்துள்ளன. பஹ்ரைன் நாட்டிலிருந்து 450 புகார்கள் மட்டுமே வந்துள்ளன. ஊதியம் மறுப்பு, தொழிலாளர் உரிமை மறுப்பு, சலுகைகள் மறுப்பு, விடுமுறை மறுப்பு, நீண்ட பணி நேரம், இந்தியா வர அனுமதி மறுப்பு, ஒப்பந்தம் முடிந்தபிறகு விசா வழங்க மறுத்தல், மருத்துவ மற்றும் காப்பீடு வசதிகள் மறுப்பு, உயிரிழந்தால் இழப்பீடு வழங்க மறுத்தல் போன்ற காரணங்களுக்காகவே பெரும்பாலான புகார்கள் வந்துள்ளன” என்று தெரிவித்தார்.

மத்திய கிழக்கு நாடுகளில் நெருக்கடிக்குள்ளாகும் இந்திய தொழிலாளர்களுக்கு உதவ தூதரகங்களில் போதிய ஊழியர்கள் உள்ளனரா என்ற கேள்விக்கு அவர், “வளைகுடா நாடுகளில் சுமார் 42 இந்திய அதிகாரிகளும், 202 ஊழியர்களும் பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உதவியாக 354 உள்ளூர் ஊழியர்களும் பணியமர்த்தப்பட்டுள்ளனர். வெளிநாடுகளில் இந்திய அலுவலகங்களில் ஊழியர்களின் தேவை குறித்து வெளியுறவுத் துறை அமைச்சகம் அவ்வப்போது ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது” என்று பதிலளித்துள்ளார்.

**

மேலும் படிக்க

**

**[டிஜிட்டல் திண்ணை: சூர்யாவை தொலைபேசியில் மிரட்டிய அமைச்சர்!](https://minnambalam.com/k/2019/07/16/84)**

**[30-45: தினகரனின் அதிரடித் திட்டம்!](https://minnambalam.com/k/2019/07/16/18)**

**[மணிரத்னம் – நயன்: உருவாகும் வித்தியாசமான கூட்டணி!](https://minnambalam.com/k/2019/07/17/20)**

**[தயாராகிறது பாகுபலி 3?](https://minnambalam.com/k/2019/07/16/26)**

**[ “மாற்று வேட்பாளரை மாற்றுங்கள்”- துரைமுருகனிடம் ஸ்டாலின்](https://minnambalam.com/k/2019/07/16/53)**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share