இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி தற்போது வலுவான நிலையில் உள்ளது.
இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி இன்று (ஜூலை1) எக்பாஸ்டனில் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இந்திய அணியில் புஜாராவுக்குப் பதிலாக கே.எல் ராகுல் சேர்க்கப்பட்டார். முரளி விஜய், தவன் துவக்க வீரர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். சுழல் பந்துவீச்சில் ரவிச்சந்திரன் அஸ்வின் மட்டும் இடம்பிடித்திருக்கிறார்.
இங்கிலாந்து அணியின் அலஸ்டேர் குக், கீட்டன் ஜென்னிங்ஸ் ஆகியோர் துவக்க வீரர்களாகக் களமிறங்கினர். நிதானமாகத் தொடங்கிய இங்கிலாந்து அணி, பொறுமையைக் கையாண்டது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட குக் 28 பந்துகளில் 13 ரன் மட்டுமே எடுத்திருந்த நிலையில் அஸ்வின் பந்துவீச்சில் போல்டாகி ஆட்டமிழந்தார். அவரையடுத்து அணித் தலைவர் ஜோ ரூட் களமிறங்கினார். இந்த இணை இன்னும் நிதான ஆட்டத்தைக் கடைபிடித்தது.
நேடுநேரம் கழித்து ஜென்னிங்ஸ் (42) முகம்மது ஷமியின் பந்தில் ஆட்டமிழந்தார். 38ஆவது ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 107 ரன்களைக் குவித்துள்ளது இங்கிலாந்து. ரூட் 39 ரன்களுடனும் களத்தில் உள்ளார்.�,