~வலிக்காத மாதிரி கேள்வி கேளுங்க: அப்டேட் குமாரு

Published On:

| By Balaji

சொன்ன மாதிரியே பாதி பேரு கூட்டணியில எந்தக் கட்சிக்கு எந்த தொகுதின்னு பார்க்க போயிட்டாங்க. பொள்ளாச்சி மேட்டரை இப்ப கல்லூரி மாணவர்கள் கையில எடுத்துருக்காங்க. வழக்கமா நாலு நாளுல இதை மறந்துருவாங்கன்னு சொன்னாலும் இந்த தடவை பெண்களுக்கு புத்தி சொல்றதை கொஞ்சம் குறைச்சுட்டு பசங்கள கவனமா வளர்க்கனும்ங்குற இடத்துக்கு வந்துருக்காங்க. தமிழ் நாடே கொந்தளிச்சுப் போயிருக்குற இந்த நேரத்துல வட இந்தியாவை விட தென் இந்தியா பெண்கள் பாதுகாப்பா இருக்குறதா ராகுல் காந்தி சொல்லிட்டு போயிருக்காரு. நீங்க ஏன் சார் வெந்த புண்ணுல வேலை பாய்ச்சுறீங்கன்னு கேட்கலாம்னு பார்த்தேன். ஆனா இதை விட வட இந்திய பெண்கள் மோசம்னா அங்க என்ன நிலைமையா இருக்கும்னு நினைச்சாலே பதறுது.. அப்டேட்டை பாருங்க சோடா குடிச்சுட்டு வாரேன்.

**@anand**

என்னிடம் கடினமான கேள்வியைக் கேளுங்கள், எளிதான கேள்விகளை கேட்க வேண்டாம்!- ராகுல்காந்தி

ராகுல் காந்தி நீங்கள் திருமணம் செய்து கொள்ளுங்கள்..

அப்புறம் கடினமான கேள்வி தானா வரும்..

**@motheen_farook**

எல்லாவற்றுக்கும் காரணம் தேடுவதும் ஒருவித மனநோய்தான் ..!!

**@parveenyunus**

எங்கள் நிலைப்பாட்டை அதிமுகவிடம் தெரிவித்துவிட்டோம் – கூட்டணிகுறித்து ஜி.கே. வாசன் #

நிலைப்பாட்டையா.. நீங்கள் படும் பாட்டையா..?

**@yaar_ni**

“காங்., கொள்கைகள் காந்தியத்திற்கு எதிரானது- பிரதமர் மோடி

யார் சொன்னது

பக்கத்து டேபிள்ல காந்திய சுட்டு கொன்ன ஆதரவாளர் பேசிகிட்டாங்க..

**@pandi_tamilan**

இங்க பிரச்சினையின் விரீயம் குறைய இன்னோரு பெரிய பிரச்சினை

அவ்வளவு தான் சார் நம்ம இந்தியா

**@Annaiinpillai**

வீட்டில் இருந்து குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதில் மெட்ரோ ரயிலாகவும் கணவரை வேலைக்கு அனுப்புவதில் புல்லட் ரயிலாகவும் மனைவிகள் செயல்படுகிறார்கள்!

**@vinoth827**

இன்றைய நிகழ்வுகளும், நாளைய எதிர்பார்ப்புகளுமே நமது உறக்கம் தடைப்படுவதற்கான காரணிகள்.

**@BlackLightOfl**

“துப்பட்டாவை ஒழுங்கா போடு”ன்னு பெண்பிள்ளை கிட்ட சொல்லுற தாய், என்னைக்கு “பொண்ணோட துப்பட்டா விலகுணா தப்பா பாக்காத”ன்னு ஆண்பிள்ளை கிட்டையும் சொல்லி வளக்கிறாளோ அன்னைக்கு இக்குற்றங்கள் மாறும் !

**@parveenyunus**

என்னிடம் கடினமான கேள்வியைக் கேளுங்கள், எளிதான கேள்விகளை கேட்க வேண்டாம்- ராகுல்காந்தி # உங்க டூத்பேஸ்ட்ல உப்பு இருக்கா..?

**@gips_twitz**

அனைவரும் ஓரணியில் நின்று நீதி பெற்றுத் தரவேண்டும் – ராமதாஸ்.

நீதி எங்கய்யா வாங்கி தராங்க சூட்கேஸ் நிறைய நிதி தான் வாங்கி வச்சுகிறாங்க

**@Annaiinpillai**

ஆபிஸ் மீட்டிங்கில் தூங்கி விழும் நபர் வேலை செய்வதில் சுறுசுறுப்பான சோம்பேறி!

**@RahimGazzali**

“என்னைப் போல் 3000 பேருக்கு மத்தியில் நின்று கொண்டு என்ன கேள்வி வேண்டுமானாலும் கேளுங்கள் என்று சொல்ல பிரதமருக்கு தைரியம் இருக்கிறதா?” – ராகுல்காந்தி #

அட… முதல்ல 30 பத்திரிகையாளர்களை வச்சு ப்ரஸ் மீட் நடத்த தைரியம் இருக்கான்னு பாருங்க.

**@shivaas_twitz**

‘எந்த பொள்ளாச்சிங்க?’னு இன்னும் ஒருத்தர் ஏர்போர்ட் பேட்டி கொடுக்கல..?

**@parveenyunus**

21 சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடப்போவதில்லை -ரஜினிகாந்த் #

நல்ல வேளை..இன்னும் 21 தேர்தல்களுக்கு போட்டியிடப் போறதில்லேன்னு சொல்லாம போனீங்களே..!

**@RahimGazzali**

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் உண்மை குற்றவாளிகளை மறைக்க திமுக முயற்சிக்கிறது: சட்டப்பேரவை துணைத்தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் குற்றச்சாட்டு #

அண்ணே அது கண்ணாடி

**@parveenyunus**

ஜெ,கருணாநிதி இல்லாத நிலையில் மக்களவைத் தேர்தலில் மக்கள் புதிய கணக்கை எழுதுவார்கள்-தினகரன் #

பழைய டோக்கன் கணக்கையும் மறக்க மாட்டாங்க..!

**@RahimGazzali**

ராகுல் காந்தி வந்த நேரத்தில் அவருக்கு செக் வைக்க த.மா.கா. வாசனை தன் கூட்டணியில் இணைத்து அவருக்கு ஒரு சீட் ஒதுக்கிய எடப்பாடியை ராஜதந்திரி என்று சொல்லாமல் வேறென்ன சொல்வது?

**@yazhinimom**

பேசிடும் வார்த்தைகளை விட பேசாமல்..நம்மைக் கடத்திடும் வார்த்தைகள் தரும் அழுத்தம் அதிகம் !

**@ItsJokker**

அனைவரும் ஓரணியில் நின்று நீதி பெற்றுத் தரவேண்டும் – ராமதாஸ்.

குற்றவாளி – உங்க பொடணிக்கு பின்னாடிதான் நிக்கிறேன் ஓவர், ஓவர்.

-லாக் ஆஃப்

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share