P
மார்ச் 28ஆம் தேதியன்று பெங்களூரு உள்ளிட்ட கர்நாடக நகரங்களில் மதச்சார்பற்ற ஜனதா தளக் கட்சித் தலைவர்களுக்கு நெருக்கமானோர், கட்சிப் பணியாளர்களின் வீடுகளில் வருமான வரித் துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். இதைத் தொடர்ந்து கர்நாடக முதல்வர் குமாரசாமியும், துணை முதல்வர் பரமேஷ்வரா, சித்தராமையா, கர்நாடக காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டு ராவ் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பெங்களூருவில் உள்ள வருமான வரித் துறை அலுவலகத்திற்கு முன்பு போராட்டம் நடத்தினர்.
இந்த நிலையில் முதல்வர் குமாரசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், “வருமான வரித் துறையினர் தொடர்ந்து சோதனை நடத்தியுள்ளனர். இன்று காலை 4 மணி வரை காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதளக் கட்சிப் பணியாளர்கள் நடத்தும் அரிசி ஆலை, சர்க்கரை ஆலைகளில் சோதனை நடத்தி, ஆலைகளில் கேமராக்களை பொருத்தியுள்ளனர். ரயில்வே அதிகாரிகள் என வேடமிட்டு தற்போது மைசூரிலுள்ள மத்திய உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி கழகத்தில் தங்கியுள்ளனர்.
எங்களது கட்சிப் பணியாளர்களை அச்சுறுத்தி, மிரட்டுவதற்கான செயல்தான் இது. இவ்விவகாரத்தில் தேர்தல் ஆணையம் உடனடியாக தலையிட்டு, கட்சிப் பணியாளர்கள் துன்புறுத்தப்படுவதை நிறுத்த வேண்டும் என நான் கோரிக்கை விடுக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
இதேபோல திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டிலும் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தியுள்ளனர். இதற்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உட்பட பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.�,