வயிற்றுப் புற்றுநோயை ஏற்படுத்தும் நெஞ்செரிச்சல் மருந்து!

public

உலகில் பெரும்பாலான மக்களுக்கு நெஞ்செரிச்சல் பிரச்னை உள்ளது. சிலருக்கு அன்றாட பிரச்னையாகவும், மீதிப் பேருக்கு அவ்வப்போது ஏற்படும் பிரச்னையாகவும் உள்ளது. இதை நெஞ்செரிச்சல் என்று சொன்னாலும், இது நெஞ்சு முழுவதும் ஏற்படும் பிரச்னை அல்ல. இது உணவுக் குழாயில் ஏற்படுகிற பிரச்னை. நடு நெஞ்சில் தொடங்கித் தொண்டைவரை எரிச்சல் பரவும். இதற்கு ‘இரைப்பை அமிலப் பின்னொழுக்கு நோய்’ (Gastro-Esophageal Reflex Disease) என்னும் பெயர் உள்ளது.

இந்த நிலையில், நெஞ்செரிச்சலுக்குப் பொதுவாக பயன்படுத்தப்படும் மருந்தால் இருமடங்கு வயிற்றுப் புற்றுநோய் வளர்ச்சி ஏற்படும் அபாயம் உள்ளது என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

வயிற்றில் உருவாகும் அமிலத்தின் அளவைக் குறைத்து நெஞ்செரிச்சல் மற்றும் வயிற்றுப் புண்களுக்கு சிகிச்சையளிக்க புரோட்டான் பம்ப் இன்ஹிபிட்டர்ஸ் (Proton pump inhibitors -PPIs) என்னும் மருந்து பயன்படுத்தப்படுகிறது.

ஜெர்னல் கட் என்னும் இதழில் வெளியிடப்பட்ட ஓர் ஆய்வில், “நீண்ட நாள்களாக நெஞ்செரிச்சலுக்குப் பயன்படுத்தப்படும் இந்த மருந்தால் 2.4 முறை வயிற்றுப் புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. லண்டனில் ஆண்டுதோறும் சுமார் 50 மில்லியன் மக்களுக்கு புரோட்டான் பம்ப் இன்ஹிபிட்டர்ஸ் மருந்து நெஞ்செரிச்சலுக்காகப் பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால், அம்மருந்தை எடுத்துக்கொள்பவர்களுக்கு அதிகளவில் பக்க விளைவுகள் ஏற்பட்டுள்ளது. அம்மருந்தின் அதிக அளவு பயன்பாட்டால், சிலர் இறந்துள்ளனர்.

புரோட்டான் பம்ப் இன்ஹிபிட்டர்ஸ் மருந்துக்கும் வயிற்றுப் புற்றுநோய் ஆபத்துக்கும் உள்ள தொடர்பு முன்பு ஆராய்ச்சியாளர்களால் அடையாளம் காணப்பட்டது. ஆனால், பாக்டீரியாவை நீக்கும் அம்மருந்தால், உடல்நலம் பாதிக்கப்படும் என்பது அந்த ஆய்வில் தெரியவில்லை.

ஹாங்காங் பல்கலைக்கழகம் மற்றும் லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரி இணைந்து நடத்திய ஆராய்ச்சியில் நோயை ஏற்படுத்தும் ஹெலிகோபேக்டர் என்னும் பாக்டீரியாவை புரோட்டான் பம்ப் இன்ஹிபிட்டர்ஸ் மருந்து நீக்கிவிடுகிறது. எனினும், அம்மருந்தால் ஏற்படும் புற்றுநோய் வளர்ச்சி அதிகரித்தது கண்டறியப்பட்டது.

புரோட்டான் பம்ப் இன்ஹிபிட்டர்ஸ் மருந்துக்கு எதிராக அமில உற்பத்தியைக் கட்டுப்படுத்தும் எச்2 ப்ளாக்கர்ஸ் (H2 blockers) என்னும் மற்றொரு மருந்தை ஆராய்ச்சியாளர்கள் ஒப்பிட்டு ஆய்வு செய்துள்ளனர். இந்த ஆய்வுக்காக சுமார் 63,397 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 2003 – 2012 வரை ஒரு வாரத்தில் ஹெலிகோபேக்டர் பைலோரியை அழிக்கும் வகையில் புரோட்டான் பம்ப் இன்ஹிபிட்டர்ஸ் மற்றும் ஆன்ட்டிபயாடிக்ஸ் ஆகியவை இணைத்து ட்ரிபிள் தெரபியாக அளிக்கப்பட்டது. அவர்களுக்கு வயிற்றுப் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்புகள் அதிகரித்து வருகிறதா, அவர்கள் இறந்து விடுகின்றார்களா என்பதை விஞ்ஞானிகள் கண்காணித்து வந்தனர். 2015ஆம் ஆண்டு இந்த ஆய்வு முடிவுக்கு வந்தது. 2013 – 2015 வரையிலான காலகட்டத்தில் 3,271 பேர் புரோட்டான் பம்ப் இன்ஹிபிட்டர்ஸ் மருந்தை மூன்றாண்டுகள் வரை எடுத்துக் கொண்டனர். இதற்கிடையில் 21,729 பேர் எச் 2 ப்ளாக்கர்ஸ் மருந்தை எடுத்துக் கொண்டனர். புரோட்டான் பம்ப் இன்ஹிபிட்டர்ஸ் மருந்தை எடுத்துக்கொண்டவர்களில் 153 பேருக்கு வயிற்றுப் புற்றுநோய் ஏற்பட்டது.

அதேபோல், எச் 2 ப்ளாக்கர்ஸ் எடுத்துக்கொண்டவர்களுக்கு வயிற்றுப் புற்றுநோய்க்கான ஆபத்து ஏற்படவில்லை. ஆனால், புரோட்டான் பம்ப் இன்ஹிபிட்டர்ஸ் மருந்து இருமடங்கு புற்றுநோய் ஏற்படுத்தும் ஆபத்தை அதிகரித்தது

இந்த மருந்தை வாரத்துக்கு ஒருமுறை எடுத்துக்கொள்பவர்களை விட தினமும் எடுத்துக் கொள்பவர்களுக்கு 4.55 மடங்கு அதிக ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல், ஓராண்டுக்கு மேல் மருந்தை ஏடுத்துக்கொண்டவர்களுக்கு ஐந்து மடங்கு புற்றுநோய் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. மூன்றாண்டுகளுக்கு மேல் எடுத்துக்கொண்டவர்களுக்கு எட்டு மடங்கு புற்றுநோய் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.

லண்டன் ஸ்கூல் ஆஃப் ஹைஜீன் அண்ட் ட்ராபிகல் மெடிசின் மருந்தியல் பேராசிரியர் ஸ்டீபன் எவன்ஸ், “பல ஆய்வுகளில் கண்டறியப்பட்ட பாதகமான விளைவுகள் புரோட்டான் பம்ப் இன்ஹிபிட்டர்ஸ் மருந்துடன் தொடர்புடையவையாக இருந்தன” எனத் தெரிவித்துள்ளார்.

இந்த ஆய்வு முடிவில் புரோட்டான் பம்ப் இன்ஹிபிட்டர்ஸ் மருந்தை நீண்ட நாள் எடுத்துக்கொண்டவர்களுக்கு பல்வேறு பக்க விளைவுகள் ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *