வன்கொடுமைச் சட்டம்: ஜனாதிபதியுடன் ராகுல் சந்திப்பு!

public

வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் குறித்த வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தொடர்பாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்தை ராகுல் காந்தி தலைமையிலான எதிர்க்கட்சியினர் நேற்று சந்தித்துப் பேசினர்.

வன்கொடுமை சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுவதாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இந்த வழக்கில் கடந்த 20ஆம் தேதி தீர்ப்பளித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் லலித் மற்றும் கோயல் அடங்கிய அமர்வு, “சில நேரங்களில் நேர்மையாகப் பணியாற்றும் அரசு ஊழியர்களைப் பணி செய்ய விடாமல் தடுத்து, அவர்கள்மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்படுகிறது. இதனால், அப்பாவி ஊழியர்கள், குற்றவாளிகளாகச் சித்திரிக்கப்படுகிறார்கள். ஆனால், அந்த நோக்கங்களுக்காக எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் கொண்டுவரப்படவில்லை. எனவே, அரசு மற்றும் தனியார் துறைகளில் பணியாற்றும் ஊழியர்களை இந்தச் சட்டத்தின்கீழ் உடனடியாகக் கைது செய்யப்படுவதற்குத் தடை விதிக்கப்படுகிறது” என்று உத்தரவிட்டது.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்தத் தீர்ப்பால் வன்கொடுமை சட்டம் நீர்த்துப்போகும் எனவும் இது தலித் மற்றும் பழங்குடி மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி எனவும் எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன. இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் எதிர்க்கட்சி தலைவர்கள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்தை நேற்று சந்தித்தனர். அப்போது, வன்கொடுமை தடுப்புச் சட்டம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு மீதான தங்களின் கவலைகளை அவர்கள் தெரிவித்தனர்.

இதேபோல, மத்திய உணவு மற்றும் நுகர்வோர்நலத் துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் தலைமையில் தலித் எம்.பிக்கள் மற்றும் அமைச்சர்கள் பிரதமர் மோடியை நேற்று சந்தித்து தீர்ப்பு குறித்த தங்களின் கவலையை வெளிப்படுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பாஸ்வான், “வன்கொடுமை தடுப்புச் சட்டம் நீர்த்துப்போகாமல் இருக்க அரசு சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும்” என்று தெரிவித்தார்.

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *