தேமுதிக-விலிருந்து நீக்கப்பட்டவர்கள் விஜயகாந்த் படத்தைப் பயன்படுத்தக்கூடாது என்றும் தேமுதிக கொடி மற்றும் கரை வேட்டியை பயன்படுத்தக்கூடாது என்றும் தேமுதிக-வின் வழக்கறிஞர் அணி செய்தி வெளியிட்டிருந்தது. இந்நிலையில் ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்த சந்திரகுமார், ‘விஜயகாந்தின் படத்தை பயன்படுத்துவதற்கு நாங்கள் முட்டாள்கள் அல்ல. தேமுதிக கொடியை நாங்கள் பயன்படுத்தவில்லை. ஆனால், கட்சி வேட்டியை கைவிடும் எண்ணம் இல்லை. வண்ணங்களுக்கு யாரும் உரிமை கொண்டாடமுடியாது. அந்த நிறத்துக்கு அவர்கள் காப்புரிமை பெற்றுள்ளார்களா?’ என்று கேள்வி எழுப்பினார்.�,
+1
+1
+1
+1
+1
+1
+1