வங்கி கணக்கில் பணம் திருட்டு: வங்கிகளே பொறுப்பு!

public

வங்கி கணக்கில் இருந்து பணம் திருடப்பட்டால் வங்கிகள் தான் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கர்நாடகா நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பெங்களூரு ஜே.பி நகரைச் சேர்ந்த ஸ்ரீநாதன்(65) , பெங்களூரு நகர இரண்டாவது கூடுதல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். அதில், தனது வங்கி கணக்கில் ரூ. 29.8 லட்சம் இருந்தது. இந்நிலையில், வங்கி கணக்கில் இருந்து வேறு இரு வங்கி கணக்குகளுக்கு ரூ.10 லட்சம் மாற்றப்பட்டதாக 2013 ஆம் ஆண்டு மே மாதம் எனது செல்பேசிக்கு குறுஞ்செய்தி வந்தது. தான் எடுக்காத பணத்தை வேறு யாரோ எடுத்துவிட்டதாக சம்மந்தப்பட்ட வங்கியில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, அந்தத் தனியார் வங்கி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நுகர்வோர் நீதிமன்றம், “வாடிக்கையாளரின் அனுமதி இல்லாமல் பணம் பரிமாற்றம் செய்யப்பட்டது உறுதியாகியுள்ளது. எனவே ரூ.10 லட்சத்துக்கும் 8 சதவிகித வட்டியுடன் அந்தத் தனியார் வங்கி வாடிக்கையாளருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

மேலும், இதுபோன்று இனி நிகழக் கூடாது என்றும், வாடிக்கையாளர்களின் கவனத்துக்கு வராமல் பணம் பரிமாற்றம் செய்யப்பட்டால் வங்கிகளே பொறுப்பேற்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *