தமிழகத்தில் அமைக்கப்பட்ட லோக் ஆயுக்தா குழுத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனத்துக்குத் தடை விதிக்க வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில், தேர்வு செய்யப்பட்ட ஐந்து பேரையும் எதிர் மனுதாரர்களாகச் சேர்த்து மனுத் தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் லோக் ஆயுக்தா அமைப்புக்குத் தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமித்து தமிழக அரசு கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி அரசாணை பிறப்பித்தது. ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி பி.தேவதாஸ் தமிழக லோக் ஆயுக்தா தலைவராகக் கடந்த ஏப்ரல் 15ஆம் தேதி பதவி ஏற்றுக்கொண்டனர். லோக் ஆயுக்தா உறுப்பினர்களும் பதவி ஏற்றுக் கொண்டனர்.
ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி எம்.ராஜாராம், மூத்த வழக்கறிஞர் கே.ஆறுமுகம் ஆகியோர் நீதித் துறை சாரா உறுப்பினர்களாகப் பதவியேற்றுக்கொண்டதாக எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. இந்த நியமனத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்துத் தொடரப்பட்ட வழக்கில், இவர்களின் நியமனத்துக்குச் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தடை விதித்தது. இந்தத் தடையை நீக்க உச்ச நீதிமன்றமும் மறுத்துவிட்டது.
இதற்கிடையே லோக் ஆயுக்தா நியமனம் தொடர்பாக மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஸ்டாலின் என்பவர் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், 2018ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் லோக் ஆயுக்தா குழுவை நியமிப்பதற்கான ஒரு கூட்டம் நடைபெற்றது.
பொதுவாக ஒரு சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்றால் மாநிலத்தின் முதல்வர், எதிர்க்கட்சி தலைவர், சபாநாயகர் ஆகியோர் அடங்கிய கூட்டத்தில்தான் குழுவை நியமனம் செய்வார்கள். ஆனால், தமிழகத்தில் லோக் ஆயுக்தா அமைப்பதற்காக நடத்தப்பட்ட கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் கலந்து கொள்ளவில்லை. தமிழக முதல்வரும், சபாநாயகரும் மட்டுமே லோக் ஆயுக்தா குழுவை நியமித்துள்ளனர்.
ஆளும்கட்சியினரே லோக் ஆயுக்தா குழுவை நியமித்துள்ளது சட்ட விதிகளுக்கு எதிரானது. இந்த நியமனத்தில் முறைகேடுகள் நடந்திருப்பதாகத் தொடரப்பட்ட வழக்கில் பதவியேற்ற உறுப்பினர்களுக்குத் தடையும் விதிக்கப்பட்டது. எனவே, தமிழக அரசால் நியமிக்கப்பட்ட லோக் ஆயுக்தா குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனம் தொடர்பான அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.
இந்த மனுவை நேற்று (ஜூன் 10) விசாரித்த நீதிபதி சத்யநாராயணன், லோக் ஆயுக்தா உறுப்பினர்களின் கருத்துகளையும் கேட்க வேண்டும் என்பதால் அவர்கள் ஐந்து பேரையும் எதிர் மனுதாரர்களாகச் சேர்த்து மற்றொரு மனுவைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.
**
மேலும் படிக்க
**
**
[கலெக்டர் ரோகிணியை எகிறிய எடப்பாடி](https://minnambalam.com/k/2019/06/10/46)
**
**
[டிஜிட்டல் திண்ணை: எம்.எல்.ஏ.க்கள் பலம்: அதிமுகவில் மோதிக்கொள்ளும் மா.செ.க்கள்!](https://minnambalam.com/k/2019/06/10/66)
**
**
[முகிலன் இருக்கிறார்!](https://minnambalam.com/k/2019/06/10/20)
**
**
[மத்திய அமைச்சரவையில் திமுக? டி.ஆர்.பாலு](https://minnambalam.com/k/2019/06/09/52)
**
**
[செக்ஸுக்கு பிறகு சக்தியாய் உணரும் இந்தியப் பெண்கள்!](https://minnambalam.com/k/2019/06/09/36)
**
�,”