{ரூ.72,000 பெறத் தகுதியானவர்களுக்கு ராகுல் கடிதம்!

public

வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் ஏழைக் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.72,000 வழங்கப்படும் என்ற காங்கிரஸின் திட்டத்தின் கீழ் பயன்பெறத் தகுதியுடைய 1.2 கோடி ஏழைக் குடும்பங்களுக்கு ராகுல் காந்தி தனிப்பட்ட கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

நியாய் சந்தேஷ் (நீதிச் செய்தி) என்ற தலைப்பில் 3ஆம் கட்ட மற்றும் 4ஆம் கட்ட தேர்தல் நடைபெறவுள்ள தொகுதிகளில் வாழும் ஏழைக் குடும்பங்களுக்கு ராகுல் காந்தி தனிப்பட்ட கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அரசு தரவுகளின்படி நாட்டில் உள்ள 20 கோடி ஏழைக் குடும்பங்களைக் கணக்கில் எடுத்து இந்தக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சியினர் கூறுகின்றனர். காங்கிரஸ் கட்சி தேர்தல் வாக்குறுதியாக அளித்துள்ள ஏழைக் குடும்பங்களுக்கு மாதத்துக்கு ரூ.6,000 வீதம் ஆண்டுக்கு ரூ.72,000 வழங்கும் நிதித் திட்டம் குறித்தும், ஆட்சிக்கு வந்தால் அத்திட்டத்தைக் கட்டாயம் நிறைவேற்றுவோம் என்று உறுதியளிக்கும் விதமாகவும் ராகுல் காந்தி இந்தக் கடிதத்தை அனுப்பியுள்ளார்.

இந்தி மொழியிலும், அந்தந்த பகுதி பிராந்திய மொழிகளிலும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் தரவு பகுப்பாய்வு பிரிவின் தலைவர் பிரவீன் சக்ரவர்த்தி *பிடிஐ* செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், “யார் யாரெல்லாம் கான்கிரீட் வீடு வைத்திருக்கிறார்கள்; குடிசை வீட்டில் இருக்கிறார்கள்; டிவி, இருசக்கர வாகனம் அல்லது செல்போன் வைத்திருக்கிறார்கள்; வேளாண் கூலிகள் மற்றும் நிலமற்ற விவசாயிகள் என்ற விவரங்கள் சேகரிக்கப்பட்டு, ஏழைக்குடும்பங்கள் அடையாளம் காணப்பட்டு இந்தக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. 3 மற்றும் 4ஆம் கட்ட தேர்தல் நடைபெறவுள்ள எல்லா வாக்குச் சாவடிக்கும் உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் 1.2 கோடி ஏழைக் குடும்பங்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.

மோடி அரசாங்கம் கடந்த 5 ஆண்டுகளில் 15 முதல் 20 கார்பரேட்டுகளுக்குதான் வேலை செய்துள்ளது என்று அந்தக் கடிதத்தில் மத்திய அரசைச் சாடி எழுதப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி மற்றும் பணமதிப்பழிப்பு நடவடிக்கைகள் குறித்தும் விமர்சிக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு நெருங்கும் சமயத்தில் காங்கிரஸின் குறைந்தபட்ச ஊதிய உறுதித் திட்டம் குறித்து ஒவ்வொரு ஏழைக் குடும்பத்துக்கும் கொண்டு சேர்த்தால், தேர்தல் முடிவுகளில் நேர்மறையான மாற்றம் ஏற்படும் என்று காங்கிரஸ் கட்சி நம்புகிறது. அதற்காகவே ஏழை மக்களுக்கு அத்திட்டத்தை விளக்கி இந்தக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் காங்கிரஸ் கட்சியின் தரவு பகுப்பாய்வு பிரிவு கூறுகிறது.

ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் 3ஆம் கட்ட தேர்தலில் 14 மாநிலங்களில் உள்ள 115 தொகுதிகளுக்கும், ஏப்ரல் 29ஆம் தேதி நடைபெறும் 4ஆம் கட்ட தேர்தலில் 9 மாநிலங்களில் உள்ள 71 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *