இந்திய சினிமா உலகில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக பேசப்பட்டுவரும் படம் பாகுபலி 2. இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா நடிப்பில் உருவாகியுள்ள ‘பாகுபலி 2’ படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ஒரே நாளில் 5 கோடிக்கும் அதிகமான பார்வையாளர்களைப் பெற்று இந்தியாவில் மட்டுமின்றி உலக அளவில் சாதனை படைத்தது. இதுமட்டுமின்றி டிரைலரில் மட்டுமல்லாமல் வெளியீட்டிலும் ‘பாகுபலி 2’ சாதனை படைக்கவுள்ளது.
ஏப்ரல் 28ம் தேதி வெளியாகவுள்ள பாகுபலி 2 இந்தியா முழுவதும் 6500 தியேட்டர்களில் திரையிடப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முன் கபாலி உள்ளிட்ட எந்த இந்தியத் திரைப்படமும் ஒரே நேரத்தில் இவ்வளவு திரையரங்குகளில் திரையிடப்பட்டதில்லை. மேலும் வட அமெரிக்காவில் மட்டும் 750 திரையரங்குகளில் இந்த படம் வெளியாக உள்ளது. உலகின் பல நாடுகளில் இந்த படத்தை பெரும்பாலான திரையரங்குகளில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் எந்தெந்த நாடுகளில் எத்தனை திரையரங்குகளில் இந்த படம் ரிலீஸ் ஆகின்றது என்பது குறித்த செய்திகள் விரைவில் வெளிவரவுள்ளது. இதுமட்டுமல்லாமல் படம் திரைக்குவருவதற்கு முன்னரே தற்போது 500 கோடிக்கு விற்பனையாகிவிட்டதாகவும் கூறப்படுகிறது.�,