~ரியல் கேப்டன் தன்ராஜ் பிள்ளை ‘ஷார்ப்’ அட்வைஸ்!

public

இந்திய ஹாக்கி அணியின் சிறந்த கேப்டனும், நான்கு முறை இந்திய அணியை ஒலிம்பிக்கிற்கு அழைத்துச் சென்றவருமான தன்ராஜ் பிள்ளை இந்திய ஹாக்கி அணிக்கு சில அட்வைஸ்களைக் கொடுத்திருக்கிறார். பல பயிற்சியாளர்கள், டெக்னிஷியன், மருத்துவர்கள் என பலர் இருந்தாலும் தொடர்ந்து இந்திய அணி செய்துவரும் தவறுகளை சுட்டிக்காட்டியிருக்கிறார் தன்ராஜ் பிள்ளை. கடந்த ஆறுமாதத்தில் இந்திய அணி அபார வளர்ச்சி அடைந்திருக்கிறது. (மலேசியாவில் நடைபெற்ற ‘சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை’யில் ஆஸ்திரேலியாவிடம் தோற்றதையும், சமீபத்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராஃபியில் ரெகுலர் டைமில் டிரா செய்து பெனால்ட்டி ஷூட் அவுட்டில் தோற்றதையும் வைத்து சொல்கிறார்). வெற்றியும் தோல்வியும் சகஜம். ஆனால் கோல் கம்பத்தின் எதிரே நிற்கும்போது கிடைக்கும் வாய்ப்பை, 100 சதவிகிதம் சரியான விதத்தில் பயன்படுத்தும் அளவுக்கு ஷார்ப்பாக இருக்கவேண்டும். இல்லையென்றால் 4 முறை இந்திய அணியை ஒலிம்பிக்குக்கு கொண்டுபோய் மெடல் வாங்கித் தராமல் திரும்ப அழைத்து வந்த தன்ராஜைப் போல், பிறகு காலத்துக்கும் அதை நினைத்தே கஷ்டப்படவேண்டியதிருக்கும். இந்நிலைக்கு நீங்கள் வர நான் விரும்பவில்லை” என்று கூறியிருக்கிறார். தன்ராஜ் பிள்ளையின் இந்த பேச்சும், அறிவுரையும் இந்திய அணிக்கு மிகவும் தேவையான ஒன்று.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.