எவ்வளவு பெரிய ஏழையாக இருந்தாலும், தன் குழந்தைக்கு நல்ல கல்வி கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் நிலைதான் தற்போது உள்ளது. தங்கள் செலவுகளைக் குறைத்துக் கொண்டு, பிள்ளைகளின் கல்விக்காகச் செலவழிக்கும் பெற்றோர் இந்தியாவில் ஏராளம். இக்கருத்தை உறுதிசெய்யும் விதமாக ஆய்வு முடிவு ஒன்று வெளியாகி உள்ளது. 41 சதவிகித இந்தியர்கள், தங்களது ரிடையர்மெண்ட் பற்றி கூட கவலைப்படாமல் பிள்ளைகளின் படிப்புக்காக செலவிடவே விரும்புகின்றனர் என்று அந்த ஆய்வு தெரிவிக்கிறது. எச்எஸ்பிசி நிறுவனம் எடுத்துள்ள இந்த ஆய்வில், 71 சதவிகித பெற்றோர் கடன் வாங்கியே தங்கள் பிள்ளைகளைப் படிக்க வைப்பதாகக் கூறியுள்ளனர். தங்கள் பிள்ளைகள் வெளிநாட்டில் படிக்க வேண்டும் என்று விரும்பும் பெற்றோர்கள் 76 சதவிகிதத்தினர். பிள்ளைகளின் கல்விச் செலவின் காரணமாக இதர முக்கியமான விஷயங்களுக்குச் செலவிட முடிவதில்லை என்று 65 சதவிகித பெற்றோர் கூறியுள்ளனர். குழந்தைகளின் பள்ளி, கல்லூரி செலவாக ஆண்டுக்கு ரூபாய் இரண்டு லட்சம் வரை செலவாவதாக பெரும்பாலானோர் கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.�,
ரிடையர்மெண்ட்டை விட, பசங்க படிப்புதான் முக்கியம்
+1
+1
+1
+1
+1
+1
+1