ரிசர்வ் வங்கியின் சுற்றறிக்கை: ரத்து செய்த உச்ச நீதிமன்றம்!

Published On:

| By Balaji

ரிசர்வ் வங்கி கடந்தாண்டு பிப்ரவரி மாதம் வெளியிட்ட சுற்றறிக்கையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

கடந்தாண்டு பிப்ரவரி மாதம் ரிசர்வ் வங்கி அனைத்து வங்கிகளுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியது. அதில், தொழில் நிறுவனங்கள் கடன் தவணைகளை செலுத்த ஒருநாள் தாமதமாக்கினாலும் கூட அதை வாராக் கடன் என்று அறிவித்து 180 நாட்களுக்குள் தீர்க்க வேண்டும். 2 ஆயிரம் கோடிக்கு அதிகமான தொகைக்கு இந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என கூறப்பட்டது.

கடனை திருப்பி செலுத்துவதற்கு ரிசர்வ் வங்கி அளித்த நேரம் போதுமானதாக இல்லை. அதனால், இதை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என பெரிய நிறுவனங்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தன.

இந்த மனுவை இன்று(ஏப்ரல் 2) நீதிபதிகள் ஆர்.எஃப்.நாரிமன்,வினீத் சரண் அமர்வு விசாரித்தது. அப்போது, ரிசர்வ் வங்கியின் சுற்றறிக்கை சட்டத்திற்கு எதிரானது எனக் கூறிய நீதிபதிகள், ரிசர்வ் வங்கியின் சுற்றறிக்கையை ரத்து செய்து உத்தரவிட்டனர்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share