Jராமரே மறுபடியும் பூமியில் அவதரித்தாலும் பாலியல் வல்லுறவுகளைத் தடுக்க முடியாது என்று உத்தரப் பிரதேச எம்.எல்.ஏ. சுரேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
வாரணாசியில் நேற்று (ஜூலை) பத்திரிகையாளர்களிடம் பேசியபோது அவர் கூறியதாவது:
பகவான் ராமரே பூமியில் மீண்டும் அவதரித்தாலும் பாலியல் வல்லுறவுகளைத் தடுக்க முடியாது என்று நான் உறுதியாகக் கூற முடியும். ஏனெனில் இதுபோன்ற சம்பவங்கள் சமூகத்தின் இயற்கையான மாசுக்கள். இது போன்ற சம்பவங்களை ஒழுக்கத்தைப் போதிப்பதன் மூலம் கட்டுப்படுத்தப்பட்ட முடியுமே அன்றி சட்டத்தைப் பயன்படுத்தி தண்டிக்க முடியாது.
பயங்கரமான குற்றவாளிகள் என்கவுன்ட்டர்கள் மூலமாக ஒழிக்கப்பட வேண்டும். ஆனால் பாலியல் வன்முறையாளர்களை அதே போன்று நடத்த முடியாது. அவர்களைச் சிறைக்குத்தான் அனுப்ப முடியும்.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
சுரேந்திர சிங் இது போன்ற சர்ச்சைக்குரிய விஷயங்களைப் பலமுறை பேசியுள்ளார். முன்னதாக, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை ராவணனின் தங்கை சூர்ப்பனகை என்றும், நரேந்திர மோடியை ராமரின் அவதாரம் என்றும் கூறி பெரும் சர்ச்சையை உருவாக்கியவர்.
�,”