^ராணுவத் துறையில் குவியும் முதலீடு!

Published On:

| By Balaji

0

ஏப்ரல் – செப்டம்பர் மாதங்களில் இந்தியாவின் ராணுவத் துறையில் 0.21 மில்லியன் டாலர் மதிப்பிலான முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ராணுவத் துறையில் குவியும் அந்நிய நேரடி முதலீடுகள் குறித்து பிப்ரவரி 11ஆம் தேதி மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய நிதித் துறை இணையமைச்சரான சி.ஆர்.சவுதரி அளித்துள்ள எழுத்துப்பூர்வமான பதிலில், 2014-15ஆம் ஆண்டில் 0.08 மில்லியன் டாலரும், 2015-16 நிதியாண்டில் 0.10 மில்லியன் டாலரும், 2017-18ஆம் ஆண்டில் 0.01 மில்லியன் டாலரும் ராணுவத் துறையில் குவிந்துள்ளதாகத் தெரிவித்தார். 2018ஆம் ஆண்டின் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான மாதங்களில் மொத்தம் 0.21 மில்லியன் டாலர் முதலீடுகள் ராணுவத் துறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்தியா தனது ராணுவ உபகரணங்களில் 70 சதவிகிதத்தை மற்ற நாடுகளிலிருந்துதான் இறக்குமதி செய்கிறது. ஒட்டுமொத்தமாக இந்த நிதியாண்டின் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையில் அனைத்துத் துறைகளிலும் 22.66 பில்லியன் டாலர் அந்நிய முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்கு முந்தைய 2017-18 நிதியாண்டில் 44.85 பில்லியன் டாலரை இந்தியா ஈர்த்திருந்ததாக சி.ஆர்.சவுதரி தெரிவித்தார்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share