ராஜன் செல்லப்பா மகனை நள்ளிரவில் சந்தித்த எடப்பாடி

Published On:

| By Balaji

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது மூன்று நாள் சேலம் பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று (ஜூன் 9) இரவு 8.25 மணிக்கு கோவை விமான நிலையத்துக்கு சென்றார். அங்கிருந்து 9.25க்கு விமானத்தில் புறப்பட்டு சென்னை வந்தடைந்தார். சென்னை விமான நிலையத்தில் இறங்கி கிரீன்வேஸ் ரோடு இல்லத்துக்கு முதல்வர் வரும்போது மணி இரவு 11.30க்குமேல் இருக்கும். அப்போது கூட முதல்வரைப் பார்ப்பதற்காக ஒரு அதிமுக பிரமுகர் முதல்வர் வீட்டில் காத்திருந்தார்.

முதல்வரும் வீட்டுக்கு வந்து சிறிது நேரத்தில் அவரை அழைத்துப் பேசியிருக்கிறார். நள்ளிரவில் முதல்வரை சந்தித்துப் பேசிய அந்த பிரமுகர் அதிமுகவின் தகவல் தொழில் நுட்பப் பிரிவு மாநில இணைச் செயலாளர் ராஜ் சத்யன். சில நாட்களுக்கு முன் அதிமுகவில் ஒற்றைத் தலைமை வேண்டுமென்று ஓங்கிக் குரல் கொடுத்த ராஜன் செல்லப்பாவின் மகனான ராஜ் சத்யன் தான் முதல்வரை நள்ளிரவில் காத்திருந்து சந்தித்திருக்கிறார்.

இந்த சந்திப்பின் நோக்கம் என்னவென்று அதிமுக வட்டாரங்களில் விசாரித்தோம்.

“எடப்பாடியின் சமூக தளங்களுக்கு அட்மின் ஆக இருப்பவர் ராஜ் சத்யன் தான். அந்த வகையில் அவர் அடிக்கடி முதல்வரை சந்தித்துப் பேசுவது சகஜம்தான். ஆனால் ஏதோ ஒரு அவசரத் திட்டத்தில்தான் நள்ளிரவில் சந்தித்திருக்கிறார்.

ஐடி விங்கில் ஓ.பன்னீர் ஆதரவாளர் சிங்கை ராமச்சந்திரன் செயலாளராக இருக்கிறார். ராஜ் சத்யன் இணை செயலாளராக இருக்கிறார். இருவருக்கும் இடையே நிறைய பிரச்சினைகள் இருக்கின்றன. இதுபற்றி முதல்வர் விசாரணை நடத்தியதாக தெரிகிறது. மேலும், கட்சிக்கு ஒற்றைத் தலைமை என்பதற்கு முன்னோட்டமாக ஐடி விங்கிற்கு ராஜ் சத்யனை மட்டுமே செயலாளராக ஆக்குவது என்ற முடிவிலும் எடப்பாடி இருப்பதாகச் சொல்கிறார்கள். அதற்கான ஆலோசனைக்காகவும் இந்த சந்திப்பு நடைபெற்றிருக்கலாம். எடப்பாடி தான் சந்திக்க விரும்பும் முக்கியமானவர்களை இப்போது பின்னிரவில்தான் வரச் சொல்லுகிறார். அப்போதுதான் பார்வையாளர்களின் குறுக்கீடு இல்லாமல் விரிவாக ஆலோசனை நடத்த முடிகிறது. அந்த வகையில்தான் ஐடி விங்கில் சிலமாற்றங்களைச் செய்வதற்காக ராஜ் சத்யனுடன் ஆலோசித்திருக்கிறார்” என்கிறார்கள்.

**

மேலும் படிக்க

**

**

[மத்திய அமைச்சரவையில் திமுக? டி.ஆர்.பாலு](https://minnambalam.com/k/2019/06/09/52)

**

**

[செக்ஸுக்கு பிறகு சக்தியாய் உணரும் இந்தியப் பெண்கள்!](https://minnambalam.com/k/2019/06/09/36)

**

**

[ஓபிஎஸ்சை கை கழுவும் கேபிஎம்](https://minnambalam.com/k/2019/06/09/53)

**

**

[முகிலன் இருக்கிறார்!](https://minnambalam.com/k/2019/06/10/20)

**

**

[பொதுவெளியில் எம்.எல்.ஏ.க்கள் கருத்து சொல்வதா? எடப்பாடி, பன்னீர்](https://minnambalam.com/k/2019/06/09/49)

**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share