அதிமுகவுக்கு ஒற்றை தலைமை வேண்டும் என்கிற ராஜன் செல்லப்பாவின் பேட்டி தொடர்பாக அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், ராஜேந்திர பாலாஜி ஆகியோர் கருத்து கூற மறுத்துவிட்டனர்.
மதுரையில் இன்று (ஜூன் 8) செய்தியாளர்களை சந்தித்த மதுரை வடக்கு மாவட்ட அதிமுக செயலாளரும். சட்டமன்ற உறுப்பினருமான ராஜன் செல்லப்பா, அதிமுக ஒற்றை தலைமையின் கீழ் செயல்பட வேண்டும் என்று பரபரப்பு பேட்டியளித்தார். ஜெயலலிதா வழிகாட்டிச் சென்றவர், கட்சியை வழிநடத்த வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், இரட்டை தலைமை இருப்பதால் உரிய நேரத்தில் முடிவெடுக்க முடியவில்லை என்றும் தெரிவித்திருந்தார்.
இதுதொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோரிடம் செய்தியாளர்கள் தனித்தனியாக கேள்வி எழுப்பியபோது, ராஜன் செல்லப்பா பேட்டியினை பார்க்கவில்லை. முழுவதும் பார்த்த பிறகு விரிவாக பதிலளிக்கிறோம் என்று ஒரே கருத்தினை தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் ஸ்ரீவில்லிப்புத்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, “ராஜன் செல்லப்பாவின் பேட்டி குறித்து பதில் சொல்லக்கூடிய நிலையில் நான் இல்லை. அதுகுறித்து உரிய நேரத்தில் சீனியர் தலைவர்கள் பதிலளிப்பர். என்னைப் போன்று அடிமட்டத் தொண்டனாக இருந்து உயர் பதவிக்கு வந்தவர்கள் அதுகுறித்து கருத்து தெரிவித்தால் அது கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்திவிடும்” என்றார். ராஜன் செல்லப்பா கூறியதை நீங்கள் ஏற்கிறீர்களா என்ற கேள்விக்கு, “இதில் நான் நடுநிலை வகிக்கிறேன். முதல்வரும், துணை முதல்வரும் பேசி இந்த விவகாரத்தில் முடிவெடுப்பர்” என்று பதிலளித்தார்.
இதேபோல் வனத் துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், “அருமையான ஆளுமையோடு கட்சி வழிநடத்தப்பட்டு வருகிறது. ராஜன் செல்லப்பா கூறியது குறித்து நான் பதிலளிக்க விரும்பவில்லை” என்று ஒற்றை வார்த்தையோடு முடித்துக்கொண்டார். இதுபோலவே அமைச்சர் தங்கமணியும் கருத்து கூற மறுத்துவிட்டார்.
**
மேலும் படிக்க
**
**
[திமுக எம்பிக்கள் ஜாதகம்: அமித் ஷா உத்தரவு!](https://minnambalam.com/k/2019/06/08/23)
**
**
[திமுக எம்.பி, எம்.எல்.ஏ.வுக்காக காத்திருந்த முதல்வர்!](https://minnambalam.com/k/2019/06/07/70)
**
**
[நடிகர் சங்கத் தேர்தல்: பின்னணியில் அமைச்சர்!](https://minnambalam.com/k/2019/06/08/48)
**
**
[வாட்ஸ் அப்பில் கேள்வி: ஆள்வைத்து அடித்த அமமுக மா.செ!](https://minnambalam.com/k/2019/06/08/15)
**
**
[ராஜ்நாத் சிங் – அமித் ஷா அதிகார மோதல்: பணிந்த மோடி](https://minnambalam.com/k/2019/06/07/31)
**
�,”