ராகுல் மட்டுமே பொறுப்பாக முடியாது: திருநாவுக்கரசர்

Published On:

| By Balaji

காங்கிரஸின் தோல்விக்கு ராகுல் காந்தி மட்டுமே பொறுப்பாக முடியாது என்று திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்ததையடுத்து, தோல்விக்கு பொறுப்பேற்று தனது தலைவர் பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்தார். ஆனால், அதனை காங்கிரஸ் காரிய கமிட்டி ஏற்க மறுத்துவிட்டது.

இந்த நிலையில் முன்னாள் பிரதமர் நேருவின் நினைவு நாளை முன்னிட்டு கிண்டியிலுள்ள அவரது உருவச் சிலைக்கு திருச்சி மக்களவை உறுப்பினர் திருநாவுக்கரசர் இன்று (மே 27) மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “நேருவுக்கு பின்னால் இந்திரா காந்தியும் ராஜீவ் காந்தியும் தங்களை நாட்டுக்கும் காங்கிரஸுக்கும் அர்ப்பணித்துக் கொண்டார்கள். அதன்பின் சோனியா காந்தி 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறப்பாக செயல்பட்டு, இன்னும் ஆலோசனைகள் வழங்கிவருகிறார். தற்போது ராகுல் காந்தி சிறப்பாக கட்சியை வழிநடத்திச் செல்கிறார். அவர் பதவி விலக வேண்டும் என்ற பேச்சுக்கே இடமில்லை. காங்கிரஸ் தலைவராக ராகுல்தான் நீடிக்க வேண்டும் என்பதுதான் நாடு முழுவதுமுள்ள தொண்டர்களின் எதிர்பார்ப்பு. மக்களின் விருப்பமும் அதுதான்” என்று தெரிவித்தார்.

“தேர்தலில் ஏற்படக்கூடிய வெற்றி, தோல்வி ஒரு தலைவரின் செல்வாக்கையோ எதிர்காலத்தையோ தீர்மானிக்கக் கூடியது அல்ல. இந்தத் தேர்தலில் ஏற்பட்டுள்ள சறுக்கலுக்கு எப்படி ராகுல் மட்டும் பொறுப்பாக முடியும்? நாடு முழுவதும் தலைவர்கள், தொண்டர்கள் சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும், மாற்றம் கொண்டுவர வேண்டும் என்று ராகுல் விரும்புகிறார். அதற்கான அதிகாரத்தை செயற்குழுவும் அவருக்கு கொடுத்திருக்கிறது” என்று குறிப்பிட்ட திருநாவுக்கரசர், ராகுல் பிரதமராக வரவேண்டும் என்றால், இரண்டு முறை மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோதே வந்திருக்கலாம் என்றும் கூறினார்.

மேலும், “ராகுலுக்காக மன்மோகன் சிங் பதவியை விட்டுத்தர தயாராக இருந்தார். எனவே பிரதமராக இருக்க வேண்டும் என்பதுதான் வாழ்க்கையின் லட்சியம் என்றால் முன்பே பிரதமராக இருந்திருப்பார். இன்னும் அவருக்கு வயது இருக்கிறது, 5 வருடங்கள் விரைவில் கடந்துவிடும். அடுத்த பிரதமராக ராகுல்காந்திதான் வருவார்” என்றும் தெரிவித்தார்.

இந்த நிலையில் டெல்லியிலுள்ள தனது இல்லத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கே.சி.வேணுகோபால், அகமது பட்டேல் ஆகியோருடன் ராகுல் காந்தி ஆலோசனையில் ஈடுபட்டுவருகிறார்.

.

.

**

மேலும் படிக்க

**

.

.

**

[ரயில்வே இணையமைச்சர் ஆகிறார் ரவீந்திரநாத்?](https://minnambalam.com/k/2019/05/26/55)

**

.

**

[அதிமுகவில் ராஜ்யசபா ரேஸ்!](https://minnambalam.com/k/2019/05/26/52)

**

.

.

**

[இடைத்தேர்தல் தோல்வி: நிர்வாகிகளுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை](https://minnambalam.com/k/2019/05/26/32)

**

.

**

[திருநாவுக்கரசர் மீது திமுக அதிருப்தி!](https://minnambalam.com/k/2019/05/26/41)

**

.

.

**

[வாக்குகளை வழிப்பறி செய்துள்ளது திமுக அணி: ராமதாஸ்](https://minnambalam.com/k/2019/05/26/35)

**

.

.�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share