இந்திய கிரிக்கெட் அணி ஒவ்வொரு காலகட்டத்துக்கும் ஏற்ப மாறியிருக்கிறது. கவாஸ்கர், ரவி சாஸ்திரி, கபில் தேவ் ஆகியோரின் கிரிக்கெட் காலம் முடியும் தறுவாயில் உருவானது தான் சச்சின், டிராவிட், கங்குலி, லட்சுமன் ஆகியோரின் காலம். இந்த நூற்றாண்டு தொடக்கத்தில் இந்திய அணி என்றாலே இவர்கள் தான் நினைவில் வந்து நிற்பார்கள். எதிரணியில் பந்துவீசுபவர்கள் இவர்களை தான் முக்கிய இலக்காக வைத்திருப்பார்கள். அதிலும் ராகுல் டிராவிட் சிம்ம சொப்பணமாக திகழ்வார். பவுண்சர், யார்கர், ஸ்விங் என எந்த வகையிலான பந்தாக இருந்தாலும், அதனை எளிதாக எதிர்கொண்டு தடுப்பாட்டத்தில் ஈடுபடுவார். அதிலும் இவரின் ஸ்டிரைட் டிரைவ் கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஆல் டைம் ஃபேவரைட் ஷாட்டாக இருக்கும்.
**எதிர்கொள்ளும் பந்துகள் அனைத்தையும் அடிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை, சரியான பந்துகளை மட்டும் அடித்தால் போதும்** என்பது ராகுல் டிராவிட்டின் கிரிக்கெட் ஃபார்முலா. தேவையற்ற பந்துகளை ஸ்டோக் கூட வைக்கமாட்டார், டிராவிட். அதன் பெயர் பயமல்ல, தற்காப்பு. அதுபோல் ஸ்டோக் வைப்பதற்கும் இவரை மிஞ்ச உலகில் வேறொரு கிரிக்கெட்டர் இல்லை எனலாம். சோயப் அக்தர் vs ராகுல் டிராவிட் என்று யூடியூபில் அடித்தால், டிராவிட்டிடம் அக்தர் கோபப்படும் வீடியோக்கள் தான் அதிகம் இருக்கும். டெஸ்ட் போட்டி ஒன்றில் இரண்டு பவுண்சர், யார்கர் என மாற்றி மாற்றி அக்தர் வீச தனது தடுப்பாட்டத்தால் பந்தை காலுக்கடியில் விழ வைத்தார். அதற்கு மாறாக 2003ஆம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிராக 22 பந்தில் அரைசதம் அடித்து அசத்தியிருக்கிறார்.
இக்கட்டான பல சூழ்நிலையில் அணியைக் காப்பாற்றும், இந்தியச் சுவர் ராகுல் டிராவிட். எப்போதுமே பொறுமையுடன் பொறுப்புடன் விளையாடியவர் ஒட்டுமொத்த கிரிக்கெட் அளவில் 24, 208 ரன்கள் குவித்து, டெஸ்ட் மற்றும் ஒருநாள் ஆகியவற்றில் சேர்த்து அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் 6வது இடத்தில் இருக்கிறார். கிரிக்கெட் தரவரிசையில் முதல் 10 இடங்களில் இருக்கும் அணிகளுக்கு எதிராக அவர்களின் சொந்த மண்ணில் சதம் அடித்திருக்கும் ஒரே வீரர் டிராவிட் தான். தனது தடுப்பாட்டம் மூலம் இந்திய அணியை பலமுறை காப்பாற்றியிருக்கும் இந்தியப் பெருஞ்சுவர் இன்று 43வது வயதை எட்டியிருக்கிறது.
**ஹாப்பி பெர்த் டே ராகுல் டிராவிட்**.
**தற்போது இந்திய இளம்(Under 19) அணிக்கு பயிற்சியளித்து, எதிர்கால அணியை கட்டமைத்து வருகிறார்**.
�,”