~ரவீந்திரநாத் எம்பி: கல்வெட்டில் பெயர் மறைப்பு!

Published On:

| By Balaji

தேனியில் தேர்தல் முடிவு வெளியாவதற்கு முன்பே ரவீந்திரநாத் எம்பி என கல்வெட்டு வைத்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் தற்போது அந்த பெயர் மறைக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்தில் உள்ள குச்சனூர் சுயம்பு சனீஸ்வர பகவான் கோயிலில் நேற்று (மே 16) கும்பாபிஷேகம் நடைபெற்றது. அந்த ஆலயத்துக்கு நன்கொடை அளித்தவர்களின் கல்வெட்டு ஒன்று மே 16ஆம் தேதியிட்டு வைக்கப்பட்டுள்ளது. அந்த கல்வெட்டில் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது மகன்கள் ரவீந்திரநாத் குமார், ஜெயபிரதீப் குமார் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. அதில் ரவீந்திரநாத் பெயருக்கு மேல் பாராளுமன்ற உறுப்பினர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. கல்வெட்டின் மேல்பகுதியில் நன்கொடை அளித்தவர்களின் பெயர்களில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெயரும் இடம்பெற்றுள்ளது. ஆனால் ஜெயலலிதாவை முதல்வர் என்று கல்வெட்டில் குறிப்பிட்டுள்ளனர். தேர்தல் முடிவுகளே இன்னும் வெளியாகாத நிலையில் தேனி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளரான ரவீந்திரநாத் பெயருடன் பாராளுமன்ற உறுப்பினர் என பொறிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தேனி தொகுதிக்கான தேர்தல் இம்முறை கடுமையான சர்ச்சைகளுடன் முடிந்துள்ளது. ரவீந்திரநாத்தை வெற்றி பெறச் செய்ய கோடிக்கணக்கில் ஓபிஎஸ் தரப்பில் பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளதாகவும், வாக்குச்சாவடிகளை அதிமுகவினர் கைப்பற்ற முயற்சிகள் நடந்ததாகவும் தேனி அமமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனும், காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனும் மாறி மாறி குற்றம்சாட்டினர். தேர்தல் ஆணையம் ஓபிஎஸ் தரப்புக்கு ஆதரவாகச் செயல்படுவதாகவும் இருவரும் குற்றம்சாட்டினர். ஓபிஎஸும் அவரது மகன் ரவீந்திரநாத்தும் வாரணாசிக்குச் சென்று மோடியையும், அமித்ஷாவையும் சந்தித்ததும் விமர்சனங்களை எழுப்பியது. மே 7ஆம் தேதி கோவையிலிருந்து தேனிக்கு 50 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டதும் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முன்பே ரவீந்திரநாத் எம்பி என கல்வெட்டு வைக்கப்பட்டிருப்பது சமூக வலைதளங்களிலும், அரசியல் வட்டாரங்களிலும் கடுமையான விமர்சனங்களை எழுப்பியுள்ளது. போலி மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது போல, போலியாக எம்பி என கல்வெட்டு வைத்த ரவீந்திரநாத் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஈவிகேஎஸ் இளங்கோவன் வலியுறுத்தியுள்ளார். மே 23ஆம் தேதிதான் தேர்தல் முடிவே வெளியாகவுள்ள நிலையில், இப்போதே ரவீந்திரநாத் எம்பி போட்டுக்கொண்ட அந்த கல்வெட்டையே அகற்ற வேண்டும் என தங்க தமிழ்ச்செல்வன் வலியுறுத்தினார். இதையடுத்து ஒரே நாளில் அந்த கல்வெட்டில் இருந்த பெயர்களைக் கோவில் நிர்வாகம் மறைத்துள்ளது. ஓபிஎஸ் குடும்பத்தினர் அனைவரது பெயரும் மறைக்கப்பட்டுள்ளது.

.

.

**

மேலும் படிக்க

**

.

**

[தினகரனுக்கு எடப்பாடி சொன்ன செய்தி!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/17/27)

**

.

**

[டிஜிட்டல் திண்ணை: சந்திரபாபு நாயுடு -துரைமுருகன் சந்திப்பு; ஸ்டாலின் நடத்திய விசாரணை!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/16/93)

**

.

**

[கேக் வெட்டிய விஜய்](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/16/87)

**

.

**

[ரசிகர்களை ஏமாற்றிய மிஸ்டர் லோக்கல்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/16/70)

**

.

**

[ஓட்டப்பிடாரம்: வீட்டுக்கு வீடு அதிமுகவின் டெலிவரி அடையாளம்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/16/26)

**

.

**

[இந்தியன் 2 ஷங்கரின் அடுத்த பிளான்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/15/45)

**

.

.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share