~ரயில் மீது மின்கம்பி அறுந்து விழுந்து விபத்து!

Published On:

| By Balaji

சென்னை அருகே ரயில் மீது உயரழுத்த மின்சாரக் கம்பி அறுந்து விழுந்ததில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை தாம்பரம் அருகே இரும்புலியூர் பகுதியில் எழும்பூரில் இருந்து மேல்மருவத்தூரை நோக்கிச் சென்ற மின்சார ரயில் மீது உயரழுத்த மின்கம்பி அறுந்து விழுந்துள்ளது. அப்போது, தீப்பொறி கிளம்பவே அச்சமடைந்த மக்கள் ரயிலை விட்டு இறங்கி அலறியடித்து ஓடியுள்ளனர். இதனால் தென்மாவட்டங்களுக்கான ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

அறுந்து விழுந்த மின் கம்பியை சீர் செய்ய சில மணிநேரங்கள் ஆகும் என்பதால் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். எனவே அதில் பயணம் செய்த 400க்கும் மேற்பட்டவர்கள் ஆட்டோ, பேருந்து உள்ளிட்ட மாற்றுப் போக்குவரத்தைப் பயன்படுத்திவருகின்றனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்புப் படையினர் சீர் செய்யும் பணியை மேற்கொண்டுள்ளனர். மேலும் மின்சாரக் கம்பி அறுந்து விழுந்ததற்கான காரணம் குறித்து விசாரணைக்குப் பின்னரே தெரியவரும் என்று ரயில்வே போலீசார் கூறியுள்ளனர்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel