ரயில் பெட்டிகளில் சிசிடிவி: ரயில்வேக்கு உத்தரவு!

Published On:

| By Balaji

ரயில் பெட்டிகளில் சிசிடிவி கேமராக்களை பொருத்துவதற்கான சாத்திய கூறுகள் குறித்து ஆய்வு செய்ய தெற்கு ரயில்வேக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

திருச்சி ரயில்வே காவல்துறையில் பணியாற்றிய வினோத் என்பவர் முத்துநகர் விரைவு ரயிலில் பணியாற்றிய போது பெண் பயணி ஒருவரிடம் அவதூறாகப் பேசியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. சென்னையைச் சேர்ந்த அந்த பெண் அளித்த புகாரின் பேரில் 2015ஆம் ஆண்டு அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்த உத்தரவை ரத்து செய்ய தெற்கு ரயில்வேக்கு உத்தரவிடக் கோரி வினோத் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு மீதான விசாரணையின் போது, “குற்றம்சாட்டப்பட்ட வினோத் என்பவருடன் பணியிலிருந்த பெண் காவலரும் சம்பவத்தன்று வினோத் மதுபோதையிலிருந்ததாக கூறியிருப்பது இந்த குற்றச்சாட்டை உறுதிப்படுத்தும் வகையில் உள்ளது” என்று தெரிவித்தார்.

வினோத் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதே தவிர குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படாதது வேதனை அளிப்பதாகத் தெரிவித்துள்ள நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், குற்றம்சாட்டப்பட்டவர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார். மேலும் தனியே பயணம் செய்யும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் ரயில்களில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டிருந்தால் இதுபோன்ற புகார்கள் எழும் போது அதனை உறுதி செய்ய உதவும் என்றார்.

அந்தவகையில், பெண்கள், குழந்தைகள், முதியவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ரயில் பெட்டிகளில் சிசிடிவி பொருத்தச் சாத்திய கூறுகள் உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்ய நிபுணர் குழு அமைத்து ஆய்வு செய்ய வேண்டும். ரயில்களில் பணிபுரியும் காவலர்களுக்குப் பயணிகள் பாதுகாப்பு குறித்து வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும் என்று தெற்கு ரயில்வேக்கு நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

**

மேலும் படிக்க

**

**[டிஜிட்டல் திண்ணை: காந்தியை நம்பும் ஏசிஎஸ்- சித்தரை நம்பும் துரைமுருகன் -விரக்தியில் திமுகவினர்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/07/31/60)**

**[தற்கொலைக் கடிதமும் வருமான வரித் துறை விளக்கமும்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/07/31/57)**

**[முடிவுக்கு வந்த நேர்கொண்ட பார்வை பிசினஸ்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/08/01/22)**

**[முதல்வரைச் சந்தித்த காங்கிரஸ் எம்.பி](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/08/01/19)**

**[சித்தார்த்தா மரணத்தில் நீடிக்கும் சர்ச்சைகள்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/08/01/25)**

**[அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/07/13/17)**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel