ரயில்நிலையத்தில் பெண் தாக்குதல்: வாலிபர் தற்கொலை முயற்சி!

Published On:

| By Balaji

சென்னை சேத்துப்பட்டு ரயில்நிலையத்தில் நேற்றிரவு ஒரு பெண்ணின் கழுத்தை அறுத்துவிட்டு ரயில் முன் குதித்தார் வாலிபர் ஒருவர். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று (ஜூன் 14) இரவு சுரேந்திரன் என்ற வாலிபர் தேன்மொழி என்ற பெண்ணுடன் சென்னை சேத்துப்பட்டு ரயில்நிலையத்தில் பேசிக் கொண்டிருந்தார். திடீரென்று அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை அங்கு பணியில் இருந்த ரயில்வே பாதுகாப்புப் படை காவலர் பார்த்துள்ளார். அந்த நேரத்தில் ரயில்நிலையத்துக்குள் மின்சார ரயில் வர, அந்த பெண்ணின் கழுத்துப் பகுதியில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கிவிட்டு, அந்த இளைஞர் ஓடும் ரயில் முன் பாய்ந்தார். இதனைக் கண்டு ரயில்நிலையத்தில் இருந்தவர்கள் அலறினர்.

காயமடைந்த தேன்மொழி உடனடியாக கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். அவருக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

ரயில் முன் பாய்ந்து தலையில் அடிபட்ட சுரேந்திரன் இறந்துவிட்டதாகக் கருதி, அவரது உடல் மின்சார ரயிலில் வைக்கப்பட்டது. எழும்பூர் அருகே ரயில் சென்றபோது, அவர் உயிரோடிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, அவர் ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்குச் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.

தேன்மொழி சுரேந்திரன் இருவரும் ஈரோட்டைச் சேர்ந்தவர்கள். தமிழ்நாடு கூட்டுறவு சங்கத்தின் சேத்துப்பட்டு கிளையில் தேன்மொழி பணியாற்றி வருகிறார். சுரேந்திரன் குறித்த தகவலோ, அவர் ஏன் தேன்மொழியைத் தாக்கினார் என்றோ இதுவரை தகவல் ஏதும் வெளியாகவில்லை.

2016ஆம் ஆண்டு நுங்கம்பாக்கம் ரயில்நிலையத்தில் சுவாதி கொலை நிகழ்ந்தபின்னர் ரயில்நிலையங்களில் சிசிடிவி பொருத்துவது, பாதுகாப்பு அம்சங்களைப் பலப்படுத்துவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகத் தெரிவித்திருந்தது ரயில்வே பாதுகாப்புப் படை. ஆனால், சம்பந்தப்பட்ட சேத்துப்பட்டு ரயில்நிலையத்தில் சிசிடிவி ஏதும் பொருத்தப்படவில்லை. இதனால், சுரேந்திரன் தேன்மொழியைத் தாக்கியது தொடர்பாக சிசிடிவி பதிவுகள் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

**

மேலும் படிக்க

**

**[டிஜிட்டல் திண்ணை: ஆட்சிக் கலைப்பு- ஸ்டாலினை குறிவைக்கும் வருமான வரித்துறை!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/06/14/65)**

**[தினகரன் தளபதிக்கு எடப்பாடி தூது: ஜெயக்குமார் எதிர்ப்பு!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/06/14/51)**

**[அதிமுக: அந்த 11 பேர் குழுவில் யார் யார்?](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/06/13/22)**

**[மூடப்படும் அருவிகள்: கேரளத்தில் பண மழை!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/06/14/20)**

**[பாக்கியராஜ் அணிக்கு விஜயகாந்த் ஆதரவு!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/06/13/44)**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share