ரயிலில் தண்ணீர்: கட்டணம் கேட்கும் தென்னக ரயில்வே!

public

ஜோலார்பேட்டையில் இருந்து தினமும் சென்னைக்கு ரயிலில் தண்ணீர் கொண்டுவரும் தமிழக அரசின் முயற்சிக்கு ஒப்புதல் தெரிவித்துள்ளது தென்னக ரயில்வே.

தமிழகம் முழுவதும் தண்ணீர் தட்டுப்பாடு எனும் பிரச்சினை வாட்டி வருகிறது. கடந்த சில நாட்களாக மழை பெய்தபோதும், முற்றிலுமாக நீர் பற்றாக்குறையைப் போக்க உடனடித் தீர்வைக் காண வேண்டிய சூழல் நிலவுகிறது. இதனால், வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரயில் மூலம் தண்ணீர் கொண்டுவரும் சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டது தமிழக அரசு. இது தொடர்பாக, நேற்று (ஜூன் 26) தென்னக ரயில்வேக்கு கடிதம் ஒன்றை அனுப்பியது.

தினமும் 10 மில்லியன் லிட்டர்கள் வீதம் 6 மாத காலத்துக்கு ஜோலார்பேட்டையில் இருந்து சென்னை வில்லிவாக்கத்துக்கு ரயில்கள் மூலம் தண்ணீர் கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும், இச்சிறப்புத் திட்டத்துக்குத் தேவையான வாகனங்களை ஏற்பாடு செய்ய தென்னக ரயில்வேயின் ஒத்துழைப்பு வேண்டுமென்றும் அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இன்று (ஜூன் 27) இது தொடர்பாக அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது தென்னக ரயில்வே. ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு நீரை ரயிலில் கொண்டுவரும் தமிழக அரசின் முடிவுக்கு ஒப்புதல் தெரிவிப்பதாகவும், இதற்கான செலவுகளைத் தமிழக அரசு ஏற்க வேண்டுமென்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயிலில் நீர் கொண்டுவரக் கட்டணம் செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

“கடந்த ஜூன் 21ஆம் தேதியன்று ஜோலார்பேட்டையில் இருந்து தினமும் 10 மில்லியன் லிட்டர் தண்ணீர் ரயிலில் கொண்டுவரப்படும் என்று தமிழக அரசு அறிவித்தபடி, இன்று முதல் இரண்டு வார காலத்துக்கு ரயிலில் நீர் கொண்டுவரப்படும். இது வடக்கு மற்றும் மத்தியச் சென்னையின் திருவல்லிக்கேணி வரை கொண்டு செல்லப்படும். இத்திட்டத்துக்காக ரூ.60 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் 80 சதவிகிதத் தொகையானது போக்குவரத்துச் செலவுகளுக்காகப் பயன்படுத்தப்படுமென்று எதிர்பார்க்கப்படுகிறது” என்று தென்னக ரயில்வேயின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

**

மேலும் படிக்க

**

**[டிஜிபி – தலைமைச் செயலாளர்: எடப்பாடியின் புதிய ஒப்பந்தம்!](https://minnambalam.com/k/2019/06/27/57)**

**[திமுக அழுத்தம்: காங்கிரஸிலிருந்து கராத்தே நீக்கம்!](https://minnambalam.com/k/2019/06/27/58)**

**[சபரீசன் பேச்சு: சிக்கிய ஆடியோ!](https://minnambalam.com/k/2019/06/26/26)**

**[டிஜிட்டல் திண்ணை: தமிழக முதல்வராகும் அமித் ஷா?](https://minnambalam.com/k/2019/06/26/90)**

**[முன்பதிவு: இளையராஜா போட்ட நிபந்தனை!](https://minnambalam.com/k/2019/06/27/24)**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *