ரஞ்சித் மீண்டும் கையிலெடுக்கும் முதல் வாய்ப்பு!

public

‘மெட்ராஸ்’ திரைப்படத்தின் வெற்றியால் ரஞ்சித்துக்குக் கிடைத்த முதல் பரிசு, சூர்யாவை வைத்து படம் இயக்கும் வாய்ப்பு. அதற்கான பணியில் ரஞ்சித் ஈடுபட்டிருந்தபோதுதான், ரஜினியின் மகள் சௌந்தர்யா அஸ்வின் குறுக்கே புகுந்து, ரஜினியை வைத்து படம் இயக்கும் வாய்ப்பை ரஞ்சித்துக்குப் பெற்றுத்தந்தார். தனது திறமைக்குக் கிடைத்த பரிசில் எதையும் தவறவிட மனமில்லாத ரஞ்சித், அடுத்ததாக சூர்யாவை வைத்து படம் இயக்குகிறார். சமீபத்தில் நடைபெற்ற ‘கபாலி’ தெலுங்கு திரைப்பட இசை வெளியீட்டில் பேசியபோது இத்தகவலை உறுதிப்படுத்தினார் ரஞ்சித். ‘கபாலி’ ரிலீஸுக்குப் பிறகு எந்தவிதமான கமிட்மெண்டிலும் சிக்காமல், சூர்யாவுடன் இணைகிறாராம். ‘சிங்கம் 3’ படத்தை முடித்துவிட்டு சூர்யாவும் ரஞ்சித் படத்துக்காக வேலை செய்கிறார். வழக்கம்போலவே ஸ்டூடியோ கிரீன் ஞானவேல்ராஜா இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0